மலையாள சூப்பர் ஹிட் படமான #மாளிகப்புரம் தமிழில் வருகிற 26ம் தேதி தமிழில் வெளியாகிறது.மிகுந்த எதிபார்ப்புகுரிய இப்படத்தின் பத்திரிகையாளர்களின் சிறப்பு காட்சி நடைப் பெற்றது. முடிவில் பத்திரிகையாளர் சந்திப்பும் நடை பெற்றது. படத்தில் இடம் பெற்ற கலைஞர்கள் பேசினார்கள்.
சிறுமி தேவ நந்தா பேசும்போது..
இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அதேபோல், இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி. அனைவரும் மாளிகப்புரம் படத்தை திரையரங்கிற்கு வந்து பார்த்து மாபெரும் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி என்றார்.
வசனகர்த்தா அபிலாஷ் உன்னி பேசும்போது..
சந்தீப் கூறியதுபோல நானும் டீ குடித்திருக்கிறேன். 20 வருடங்களாக திரையரங்கிற்கு வராதவர்கள் தான் திரையரங்கிற்கு அதிகளவில் வருகிறார்கள். 3 தலைமுறைகளும் சேர்ந்து வருகிறார்கள். சினிமாவில் ஒரு கதாநாயகன் நடித்தால், அவருடைய பகுதிகளை மட்டும் பணியாற்றி செல்வார்கள். ஆனால், உன்னி இந்த படத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். இப்படம் என்னுடைய 4வது படம். நான் எழுதும் கதைக்கு நான் நினைக்கும் விதமாகத்தான் உணர்வுகளை பதிவு செய்வேன். ஆனால், இறுதிக் காட்சியில் அந்த குழந்தை படியில் கால் வைக்கும்போது எத்தனை முறை பார்த்தேன் என்று தெரியவில்லை. இதற்கு உயிரூட்டியது இசையமைப்பாளர் ரஞ்சன் தான். இந்த கதையை நான் இயக்கியது ஐயப்பன் அருளால் தான். கூடவே எனது பெற்றோர்களின் ஆசிர்வாதமும் இருக்கிறது. சபரிமலைக்கு சென்றவர்களுக்குத் தெரியும். ஆபத்தான இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். சைஜோன் நன்றாக நடித்திருக்கிறார். கேரள திரையரங்கில் அவர் அடி வாங்கும் காட்சியில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வந்தது.
சம்பத் ராம் சார் கேரளாவிற்கு வந்தால் அடி நிச்சயம். அந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். கொடூரமான வில்லனாக நடிக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால், நான் கூறியதற்கு மேலாக அவர் நடித்திருக்கிறார். தமிழ்நாட்டில் சிறந்த படங்களை விநியோகம் செய்வதற்கு தயங்கமாட்டார்கள். சபரிமலையில் இறுதிக் காட்சி படப்பிடிப்பின் போது டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவி அங்கு வந்திருந்தார். அதன்பிறகு, தமிழ்நாட்டில் விநியோகம் செய்வதற்கு அவரிடம் பேசலாம் என்று கூறும்போது இதுவும் ஐயப்பன் செயல் தான் என்று தோன்றியது என்றார்.
தமிழில் சூர்யா – ஜோதிகா நடித்த #பேரழகன் படத்தை டைரக்ட் செய்த சசி சங்கரின் மகன் விஷ்ணு சசி சங்கர் டைரக்ட் செய்த முதல் படம் இது. அவர் பேசும்போது..,
மேடையில் எனக்கு பேசத் தெரியாது. பிரசாத் லேப்-ற்கு வரும்போது எனது தந்தையின் நினைவு வந்தது. முதன்முதலாக என்னுடைய அப்பாவுடன் தான் இங்கு வந்தேன். காதாசிரியர் சொன்னது மாதிரி நானும் எதிர் கடையில் டீ குடித்தேன். இப்பட தயாரிப்பாளர்களான பிரியா வேணு, வேணு குந்தம்பள்ளி அவர்களுக்கு நன்றி.
இந்த படம் உன்னி முகுந்தனை நோக்கி பயணிக்கும். அவருக்கு நன்றி. தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரின் ஆசிர்வாதங்களும் கிடைக்கும் என்று நம்புகிறேன். தமிழ்நாடு என்னுடைய இரண்டாவது வீடு என்றார்.








Leave a Reply