மிகவும் அதிகளவில் விரும்பப்பட்ட இளைஞர்களின் பிரபலமான நகைச்சுவை ஹிந்தி தொடரான ஹாஸ்டல் டேஸின் தமிழ் பதிப்பான எங்க ஹாஸ்டல் தொடரின் வெளியீட்டை பிரைம் வீடியோ சமீபத்தில் அறிவித்தது. TVF ஆல் உருவாக்கப்பட்ட இந்தத் தொடரில், மாணவர்கள் தங்களின் அடையாளம், நட்பு, காதல், வாழ்க்கை மற்றும் கல்வி போன்ற பல்வேறு வாழ்க்கை போராட்டங்களை எதிர்கொண்டு போராடிவரும் வாழ்க்கையினூடே அதுதொடர்பான வேடிக்கையான சூழ்நிலைகளை காட்சிப்படுத்தியிருக்கிறது. பிரைம் வீடியோ தொடர் வெளியிடப்படும் நாள் நெருங்கி வரும் இந்த வேளையில் இதன் ட்ரெய்லர் வெளியீடு, பார்வையாளர்களின் ஆர்வத்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது. எங்க ஹாஸ்டலின் விசித்திரமான மற்றும் உற்சாகமளிக்கும் பைத்தியக்காரத்தனமான ரசிக்கத்தக்க கொண்டாட்டங்களில் ஒரு சிலவற்றை இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

அவினாஷ் ரமேஷ் ஏற்றிருக்கும் சித்தப்பு என்ற பாத்திரம் ஒரு , குறும்புத்தனமான, கவலையற்ற அடக்குமுறையையாளர் என்றாலும் கூட அவரிடம் பல ரகசியங்கள் அடங்கியுள்ளன.பிரைம் வீடியோ இந்தத் தொடரில் துடுக்குத் தனமான ஆனாலும் ஒரு, அப்பாவியான அஜய் பாத்திரத்தில் தோன்றும் சச்சின் நாச்சியப்பன், தனது சிறுவயது மயக்கத்தில் சித்தாப்புவிடம் சிக்கிக் கொள்கிறார், ஆனால் இறுதியில் மாணவர்கள் மத்தியில் மிக முக்கியமானவராக உருவெடுக்கிறார்.

சம்யுக்தா விஸ்வநாதன் ஏற்று நடித்த, சரண்யா ரவிச்சந்திரன் தோன்றும் ராஜா பாத்திரம் ஒரு இனிமையான, அப்பாவியான தமிழ்ப் பெண், தொடக்கத்தில் அவர் பயந்த சுபாவம் கொண்டவராகவும் இறுதியில் எந்த ஒரு சூழ்நிலையையும் எளிதாக கையாளுபவராக அனைவரையும் கவர்ந்திழுக்கும் தைரியமான தனித்தன்மை வாய்ந்த ஒரு நபராக உருவெடுக்கிறார்.

செந்தில் பாத்திரத்தில் கௌதம் ராஜ் நடித்துள்ளார், அவரது உதவும் மற்றும் பரிவோடு பழகும் குணம் ஆகியவற்றால் பெரும்பாலானோர் அவரது நட்பு வட்டாரத்தில் இருக்கிறார்கள். செல்வாக்கு மிக்க தந்தையின் மகனான டிராவிட் செல்வம், ஒரு தொழில்முனைவோராக விரும்பும் பாண்டியன் என்ற ஜெய வீர பாண்டியனாக நடித்துள்ளார்.

வருகை தாருங்கள், பிரைம் வீடியோவின் எங்க ஹாஸ்டலின் இந்த அன்பான ஹாஸ்டல் தோழர்களின் பயணத்தில் இணைந்து கொள்ளுங்கள்!

Leave a Reply

Your email address will not be published.