Kaaviyyan Movie Stills – Shaam

Actor Shaam, Actress Sridevi Kumar, Athmiya, Srinath & Justin Vikaash starring Kaaviyyan Movie Stills.Directed by Parthasarathy and Music by Syam Mohan MM. Produced by KV Shabarreesh under 2M cinemas banner. Vaadu Osthadu Telugu Movie Stills. – PRO – Bhuvan

நடிகர் ஷாம் தற்போது “ 2M cinemas ” K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் “ கா-வியன் “ என்றும் தெலுங்கில் “ வாடு ஒஸ்தாடு “ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அண்மையில் இப்படத்துக்காக சண்டை பயிற்சியாளர் STUN சிவா தலைமையில் ஒரு அதி பயங்கர கார் சேஸிங் சண்டைக்காட்சி, லாஸ் வேகாஸில் மக்கள் அதிகம் கூடும் வீதிகளில் பரபரப்பாக படமாகியுள்ளது. இப்படத்தின்ல் சண்டைக்காட்சி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தும். மேலும் இப்படத்தில் கோலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் தொழிலநுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால் இப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாம் ஜோடியாக ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். கோலிவுட் நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – N.S.ராஜேஷ் குமார்
இசை – ஷ்யாம் மோகன்
பாடல்கள் – மோகன்ராஜ்
கலை – T.N கபிலன்
நடனம் – விஷ்ணுதேவா
எடிட்டிங் – அருண்தாமஸ்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – 2M cinemas ” K.V. சபரீஷ்
எழுத்து இயக்கம் – சாரதி

இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்த படம் ஷாமிற்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்றார் தயாரிப்பாளர் கே.வி.சபரீஷ்.

Leave a Reply

Your email address will not be published.