ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்  தயாரிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில்  தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா,ஜிம் சர்ப்  ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’குபேரா’

கடலில் எண்ணெய் வளம் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கிறார்கள்.  இதனையடுத்து  பிரபல அதிபராக இருக்கும் ஜிம் சர்ப், பல ஆயிரம் கோடி மதிப்பிலான எண்ணெய் கான்ட்ராக்டை சூழ்ச்சி செய்து கைப்பற்ற நினைக்கிறார்.

அதற்காக அமைச்சருக்கு  ஒரு லட்சம் கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முடிவு செய்கிறார்.  இதற்காக நேர்மையான முன்னாள் சிபிஐ அதிகாரியான நாகார்ஜுனாவை வைத்து பணத்தை மாற்ற முடிவு செய்கிறார் தொழிலதிபரான ஜிம் சர்ப்

இதனையடுத்து நாகார்ஜுனா, தனுஷ் உட்பட நான்கு பிச்சை காரர்களை பினாமி மாதிரி வைத்து பணத்தை மாற்ற முடிவு செய்கிறார். அதன்படி மூன்று பிச்சை காரர்களை வைத்து பணத்தை மாற்றி அவர்களை கொலை செய்து விடுகிறார்.

இந்நிலையில் தனுஷ் பேரில் இருக்கும் 10,000 கோடி பணம் மாற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. நாகார்ஜுனா பிடியில் இருக்கும் தனுஷும் தப்பி  சென்று விடுகிறார்.  இறுதியில் தனுஷை நாகார்ஜுனா கண்டுபித்தார்களா ? இல்லையா?  
நாகார்ஜுனா  அமைச்சருக்கு பணத்தை அனுப்பினாரா? இல்லையா? என்பதே ’குபேரா’  படத்தின்  மீதிக்கதை.

பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.அதிலும் குறிப்பாக கை விரல் உடைந்தவராக நடித்திருப்பது பாராட்டுக்குரியது. அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் தனுஷுக்கு பாராட்டுக்கள்.

நாயகியாக நடித்து இருக்கும் ராஷ்மிகா மந்தனா நடிப்பு கவனிக்க வைக்கிறது.  நேர்மையான  சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கும்  நாகார்ஜுனா நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. ஸ்டைலான வில்லனாக மிரட்டியிருக்கிறார் ஜிம் சர்ப், நாகார்ஜுனா மனைவியாக வரும் சுனைனா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

 இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பொய் வா நண்பா பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி  இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலம் .

பினாமி  பெயரில்  பணத்தை வைத்து நடக்கும் அரசியல் விளையாட்டை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சேகர் கம்முலா இத்திரைப்படத்தை பணம் படைத்தவனிடம் இருந்து எளியவன் எந்த விதத்தில் எல்லாம் பாதிக்கப்படுகிறான் என்பதை அழுத்தமாக பதிவு செய்த்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில்   ’குபேரா’  வாழ்க்கை போராட்டம்

மதிப்பீடு : 3.5/5

நடிகர்கள்: தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா, ஜிம்,
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
இயக்கம்: சேகர் கம்முலா
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)

Leave a Reply

Your email address will not be published.