பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரிப்பில் இயக்குனர் ரமேஷ் இலங்காமணி இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக், மனிஷா ஸ்ரீ, பாத்திமா நஹும், வைஷாலி ரவிச்சந்திரன், ஜீவா ரவி, லிவிங்ஸ்டன் ஆகியோர் நடிப்பில் ’மெஸன்ஜர்’ திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகியுள்ளது.
மனிஷா உடனான காதல் தோல்வியால் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் தற்கொலை முயற்சி செய்ய . அப்போது அவரது முகநூல் மெஸன்ஜருக்கு தொடர்ந்து மெசஜ் வந்துக் கொண்டிருக்கிறது. அந்த மெசேஜை பார்த்து தற்கொலை முயற்சியை கை விடும் நாயகன் ஸ்ரீராம்
தனக்கு மெசேஜ் அனுப்பியது யார்? என்று தெரிந்து கொள்வதற்காக இன்ஸ்பெக்டர் லிவிங்ஸ்டனிடம் உதவி கேட்கிறார். இதனையடுத்து அந்த பெண் பெயர் ஆனந்தி (பாத்திமா) என்றும் இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் இறந்து போனவர் என்பது தெரிய வர ஸ்ரீராம் அதிர்ச்சி அடைகிறார்.
இதனையடுத்து ஆனந்தி (பாத்திமா) ஆன்மாவுடன் ஸ்ரீராம் மெஸஞ்சர் மூலமாக பேசிக் கொண்டே இருக்க இருவரும் காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்கிறார்கள்.
இறுதியில் ஸ்ரீராம் – ஆனந்தி (பாத்திமா) இருவருக்கும் திருமணம் நடந்ததா ? இல்லையா? இந்த சமூகம் இவர்கள் திருமணத்தை ஏற்றுக் கொண்டதா ? இல்லையா? என்பதே ’மெஸன்ஜர்’ படத்தின் மீதிக்கதை.
கதைநாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக் இயல்பான நடிப்பால் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். மனிஷா உடனான காதல் தோல்வி , ஆவியான பார்த்திமாவை உருகி உருகி காதலிப்பது என்று எதார்த்த நடிப்பால் கவர்கிறார்.
கிராமத்து பெண்ணாக நடித்திருக்கும் பார்த்திமா கொடுத்த வேலையை சரியாக செய்து அனைவரின் பாராட்டை பெறுகிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் மனிஷா ஸ்ரீ முன்னாள் காதலியாக தன் வேலையை சரியாக செய்திருக்கிறார்.
பாத்திமாவின் தோழியாக நடித்திருக்கும் வைசாலி ரவிச்சந்திரன்,ஜீவா ரவி, லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அபுபக்கர்.எம் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. பால கணேசன்.ஆர், ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
இன்றைய தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத ஒன்று ஆவியுடனான காதல் அந்த காதலை மைய கருவாக வைத்து திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் இலங்காமணி இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை அனைவரும் ரசிக்கும் வகையில் திரைக்கதையை சுவாரஸ்யமாக கொண்டு சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’மெஸன்ஜர்’ – கண்ணுக்கு தெரியாத காதல்
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : ஸ்ரீராம் கார்த்திக், மனிஷா ஸ்ரீ, பாத்திமா நஹும், வைஷாலி ரவிச்சந்திரன், ஜீவா ரவி, லிவிங்ஸ்டன்
இசை : அபுபக்கர்.எம்
இயக்கம் : ரமேஷ் இலங்காமணி
மக்கள் தொடர்பு : சதீஸ்வரன்

Leave a Reply