விராட் கர்ணா, அபிஷேக் நாமா, கிஷோர் அன்னபுரெட்டி, NIK ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸ், பான் இந்தியா திரைப்படமான “நாகபந்தம்” படத்தின் பாடல் ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்க ஆனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் பிரம்மாண்ட செட்டில் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இளம் ஹீரோ விராட் கர்ணா, இந்த பான் இந்திய திரைப்படமான நாகபந்தத்தில் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் அபிஷேக் நாமா இயக்குகிறார். அபிஷேக் பிக்சர்ஸுடன் இணைந்து NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கிஷோர் அன்னபுரெட்டி இப்படத்தை தயாரிக்கிறார். லட்சுமி இரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோர் பெருமையுடன் இப்படத்தை வழங்குகிறார்கள்.
படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது, தயாரிப்பாளர்கள் ஒரு முக்கியமான காட்சியையும் ஒரு பாடலையும் பிரம்மாண்டமான அரங்கில் படமாக்கி வருகின்றனர். அனந்த பத்மநாப சுவாமி கோயிலின் மிக பிரம்மாண்டமான செட்டை, கலை இயக்குநர் அசோக் குமார் இந்த பாடலுக்காக வடிவமைத்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில், விராட் கர்ணாவுடன் இணைந்து 1000 நடனக் கலைஞர்கள் இணைந்து நடனமாடும் இந்தப் பாடல், பண்டைய அழகியல், நவீன திரைப்பட உருவாக்கம் மற்றும் அட்டகாசமான நடன அமைப்பு என பல ஆண்டுகளாக நினைவில் இருக்கும் ஒரு காட்சி அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாக பந்தம் படத்தில் வரும் இந்த ஒரு எபிசோடிற்காக 10 கோடி ரூபாய் பட்ஜெட் செலவிடப்பட்டுள்ளது. மக்கள் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் ஒரு அற்புதமான அனுபவமாக இப்படத்தை உருவாக்குவதற்காகவும், அகில இந்திய காவியங்களுக்கு இணையான பிரமாண்டத்தை வழங்கவும் தயாரிப்பாளர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
“நாகபந்தம்” படத்தில் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர், மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
“நாக பந்தம்” 2025 ஆம் ஆண்டில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில், பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது.
நடிகர்கள்: விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ்.அவினாஷ் மற்றும் பலர்
தொழில்நுட்பக் குழு:
பேனர்: NIK ஸ்டுடியோஸ் & அபிஷேக் பிக்சர்ஸ் லட்சுமி ஐரா & தேவன்ஷ் வழங்குகிறார்கள்
கதை, திரைக்கதை & இயக்கம் : அபிஷேக் நாமா
தயாரிப்பாளர்: கிஷோர் அன்னபுரெட்டி
ஒளிப்பதிவு இயக்குனர்: சௌந்தர் ராஜன் எஸ்
இசை: அபே ஜுனைத் U
நிர்வாக அதிகாரி: வாசு பொதினி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அசோக் குமார் வசனங்கள்: கல்யாண் சக்ரவர்த்தி
எடிட்டர்: ஆர்சி பனவ்
ஆடை வடிவமைப்பாளர்: அஸ்வின் ராஜேஷ்
நிர்வாக தயாரிப்பாளர்: அபிநேத்ரி ஜக்கல்
ஸ்டண்ட் : வெங்கட், விளாட் ரிம்பர்க்
ஸ்கிரிப்ட் டெவலப்மெண்ட்: ஷ்ரா1, ராஜீவ் N கிருஷ்ணா
Vfx: தண்டர் ஸ்டுடியோஸ் Vfx
மேற்பார்வையாளர்: தேவ் பாபு காந்தி (புஜ்ஜி)
விளம்பர வடிவமைப்புகள்: கானி ஸ்டுடியோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்


Leave a Reply