Upbeat Pictures சார்பில், தயாரிப்பாளர் VRV குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சரண்டர்”.

இப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இப்படத்தில் தர்ஷன் நாயகனாக நடித்துள்ளார், பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மன்சூர் அலிகான், லால், சுஜித் ஷங்கர், முனிஷ் காந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழு விபரம்.
தயாரிப்பாளர்: VRV. குமார்
எழுத்து & இயக்கம் – கௌதமன் கணபதி
ஒளிப்பதிவு : மெய்யேந்திரன்
இசை : விகாஸ் படிஸா
எடிட்டர்: ரேணு கோபால்
கலை இயக்குநர்: R K மனோஜ் குமார்
ஸ்டண்ட்: ஆக்‌ஷன் சந்தோஷ்
ஒலி வடிவமைப்பு: கே.பிரபாகரன் & பி.தினேஷ் குமார்
ஒலி கலவை: ஷரோன் J மனோகர்
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் S2 Media

Leave a Reply

Your email address will not be published.