மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.. இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, இணை தயாரிப்பாளர் மகேஷ், ஒளிப்பதிவாளர் கதிரவன், இயக்குநர் வேலு பிரபாகரன், நடிகர்கள் ஆடுகளம் நரேன், பசி சத்யா, விஜயா மாமி, சண்டைப் பயிற்சியாளர் ஹரி தினேஷ், இணை இசையமைப்பாளர் வில்லியம்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.

ஒளிப்பதிவாளர் கதிரவன் பேசும்போது, ‘ஆன்டி இண்டியன் என்பது மாறனுடைய பிடிவாதம் என்று சொல்லலாம். அது வறட்டு பிடிவாதமோ, அல்லது முரட்டு பிடிவாதமோ அல்லாமல் ஒரு மாற்று சிந்தனைக்கான பிடிவாதமாகத்தான் எப்போதும் இருந்துள்ளது. பெரியாரின் வாதம் போல நேர்மையாகவும் கூர்மையாகவும் தான் அது இருக்கும்.

திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்தியதால் தான் இந்தப்படத்தை 18 நாட்களில் 23 கால்ஷீட்டுகளில் முடித்தோம்” எனக் கூறினார்.இயக்குநர் வேலு பிரபாகரன் பேசும்போது, “மாறனைப் பார்க்கும்போது ஒருபக்கம் ரவுடி குணம் கொண்ட குழந்தை மாதிரி தெரிகிறார். இன்னொரு பக்கம் உன்னதமான குணங்களைக் கொண்ட சினிமா தாதா போலத் தெரிகிறார். ஆனால் இப்படி ஒரு தாதா சினிமாவுக்கு தேவைதான். அவர் எடுத்திருக்கும் படம் கூட இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் மதம் பற்றிய படம் தான். சமூக பொறுப்புடன் கூடிய இயக்குநர்கள் இப்படிப்பட்ட படங்களைத்தான் எடுக்க வேண்டும்.. என்னுடைய எத்தனையோ கதைகளை பலபேர் காசு கொடுக்காமலே படமாக எடுத்துள்ளார்கள். பாலிவுட்டில் வெளியான டர்ட்டி பிக்சர் கூட என்னுடைய பேட்டியின் மூலம் சொல்லப்பட்ட கதை தான். ஆனால் மாறன் நான் சொன்ன கதைக்கு ஒரு நல்ல தொகை கொடுத்தார். அது இந்த கொரோனா காலகட்டத்தில் எனக்கு பேருதவியாக இருந்தது.

இப்படத்தில் இளம் நாயகனாக நடித்துள்ள ஷான் பேசும்போது, “ஆன்டி இண்டியன் படத்தில் நடிக்கிறேன் எனக் கூறியதும் என் நண்பர்கள் அதிர்ச்சியானார்கள். ஆனால் எப்படியும் இவர் படத்தைப் பார்த்து கழுவி ஊற்றவாவது நிறைய பேர் வருவார்கள். அப்படியாவது என் முகமும் பிரபலமாகும் என்று நினைத்துதான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.