லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ரெஜீனா கெசண்ட்ரா, ஆரவ்  ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘விடா முயற்சி ’

இதனையடுத்து 12 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் வாழ விருப்பமில்லாத த்ரிஷா, அஜித்தை விட்டு விலகுவதாக கூறுகிறார். முதலில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் அஜித்  பிறகு விவகாரத்திற்கு  சம்மதம் தெரிவிக்கிறார்.

ஒருநாள் திரிஷா தன் அம்மா வீட்டிற்கு செல்ல நினைக்கிறார். அதற்கு அஜித், தான் காரில் கொண்டு வந்து விடுகிறேன் என்று கூறுகிறார். இதனையடுத்து இருவரும் அடர்ந்த பாலைவனப் பகுதியில் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். செல்லும் வழியில், கார் பழுதடைந்து விடுகிறது.

இந்த சமயத்தில் மிகப்பெரிய டிரக் வாகனத்தில் வரும் அர்ஜூன் மற்றும் அவரது மனைவி ரெஜினாவிடம் அருகில் இருக்கும் காபி ஷாப்பில் த்ரிஷாவை இறக்கிவிடும்படி கூறுகிறார் அஜித்.

இதனையடுத்து அஜித். பழுதடைந்த காரை சரிசெய்து  விட்டு த்ரிஷாவை தேடி காபி  ஷாப்பிற்கு  செல்ல அங்கு சென்று பார்த்தால்  த்ரிஷா காணாமல் போகிறார். இறுதியில் அஜித் காணாமல் போன த்ரிஷாவை கண்டுபிடித்தாரா? இல்லையா?  திரிஷாவுக்கு என்ன ஆனது? என்பதே  ‘விடா முயற்சி ’ படத்தின் மீதிக்கதை.

அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜித் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்திலும் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். திரிஷா காணாமல் போன பிறகு பதட்டம், பரிதவிப்பு என முழுப்படத்தை தன் தோல் மீது சுமந்து நிற்கிறார்.குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். 

கயல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷா அழகாக வந்து அளவான நடிப்பின் மூலம் கவர்கிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது அனுபவ நடிப்பின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அர்ஜுன் காதலியாக நடித்திருக்கும் ரெஜினாவும் தன் பங்கிற்கு வில்லத்தனத்தில் தனி முத்திரை பதித்திருக்கிறார்  ஆரவ் நடிப்பு கவனிக்க வைக்கிறது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படதத்திற்கு பலம் சேர்க்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.

‘பிரேக் டவுன்’ எனும் ஹாலிவுட் படத்தினை தழுவி தயாரிக்கபப்ட்டிருக்கும் ‘விடா முயற்சி ’  ஹாலிவுட் தரத்தில் ஒரு ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. முதல் பாதி திரைக்கதை மெதுவாக செல்வ  இரண்டாம் பாதி திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார்.    

மொத்தத்தில் ‘விடா முயற்சி ’ வெற்றியை நோக்கி

மதிப்பீடு : 3/5

நடிகர்கள்: அஜித், த்ரிஷா, அர்ஜூன், ரெஜீனா கெசண்ட்ரா, ஆரவ்
இசை : அனிருத்
இயக்கம்: மகிழ் திருமேனி
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர் (D One )

Leave a Reply

Your email address will not be published.