குல்ஷன் குமார், டீ-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ தயாரிப்பில் ஆனந்த் எல் .ராய் இயக்கத்தில் தனுஷ், கிருத்தி சனோன், பிரகாஷ் ராஜ், புஷ்பராஜ் ராய் செளத்ரி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’தேரே இஷ்க் மே ’ .
இந்திய விமானப்படையின் சிறந்த வீரராக இருக்கும் தனுஷ் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தனது மேல் அதிகாரியின் பேச்சைக் கூட கேட்காமல் நடந்து கொள்கிறார். இதனால் தனுஷுக்கு சைக்காலஜி மருத்துவரிடம் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் அதுவரை தனுஷ் விமானத்தை இயக்க கூடாது என்று மேல் அதிகாரி உத்தரவிடுகிறார்.
இதனையடுத்து கர்ப்பிணியாக இருக்கும் சைக்காலஜி மருத்துவர் நாயகி கிருத்தி சனோன் தனுஷுக்கு கவுன்சிலிங் தருவதற்காக அங்கு செல்கிறார். கிருத்தி சனோனை நேரில் பார்க்கும் தனுஷ் அதிர்ச்சி அடைகிறார்.
இறுதியில் கிருத்தி சனோனை பார்த்து தனுஷ் அதிர்ச்சி அடைய காரணம் என்ன? இருவருக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? கிருத்தி தனுசுக்கு கவுன்சிலிங் கொடுத்தாரா? இல்லையா? என்பதே ’தேரே இஷ்க் மே ’ படத்தின் மீதிக்கதை.
இந்திய விமானப்படை வீரராக நடித்திருக்கும் தனுஷ் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கோபக்கார மாணவர், அன்பான காதலர் , விமான அதிகாரி என்று அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மருத்துவராக நடித்திருக்கும் கிருத்தி சனோன் அறிவுரை கூறும் பெண்ணாக சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
தனுஷின் அப்பாவாக வக்கீலாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் அனுபவ நடிப்பால் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் புஷ்பராஜ் ராய் செளத்ரி, இணை செயலாளராக எதார்த்த நடிப்பால் கவர்கிறார். மேல் அதிகாரி , தனுஷ் நண்பர்கள் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பார் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை , பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. துஷார் காந்தி ராய் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலமாக உள்ளது.
இயக்குனர் ஆனந்த் எல் .ராய் – தனுஷ் கூட்டணியில் உருவான ராஞ்சனா (அம்பிகாபதி ) படத்திற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அதே போல் இப்படத்தில் தனுஷ் நம்மை மீண்டும் கலங்க வைத்துவிட்டார். அதுவே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியாகும்.
மொத்தத்தில் ’தேரே இஷ்க் மே ’ – காதல் அழிவதில்லை
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : னுஷ், கிருத்தி சனோன், பிரகாஷ் ராஜ், புஷ்பராஜ் ராய் செளத்ரி
இசை : ஏ.ஆர்.ரகுமான்
இயக்கம் : ஆனந்த் எல் .ராய்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது & பராஸ்