Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும், அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி”. இப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்
தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பேசியதாவது..,
நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விழாவின் நாயகன் கணேஷ் சந்திரா. அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்கு பெருமை. இன்று அவரை இயக்குநராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும் பெருமை. உங்கள் உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது. மீடியா, ரசிகர்கள் எல்லாரும் கண்டிப்பாக பாராட்டுவார்கள். மலையாள சினிமா போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் வர வேண்டும். அந்த வகையில் புதிய பரதி ஒரு முக்கியமான எழுத்தாளர். இந்த படத்துக்கு பிறகு அவர் பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது. அஜய் – மிக நேர்மையான, உழைப்பாளி. முதலில் ஒரு நல்ல மனிதன். அதனால் தான் நல்ல நடிகனாகவும் பெரிய இடத்திற்கு வருவார். தனுஷா – மிகவும் புத்திசாலியான, திறமையான நடிகை. டயலாக் டெலிவரி, டப்பிங், நடிப்பு – எல்லாமே சிறப்பாக இருந்தது. இந்த படம் உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொண்டு வரும். இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் குழு, எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பு குழு அனைவருக்கும் என் நன்றி. இந்த படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது. உங்கள் ஆதரவோடு இது பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன். இப்படத்தின் உரிமையை வாங்கிய Zee நிறுவனத்திற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
இவ்வளவு நாள் கேமராவுக்குப் பின்னாடி இருந்து மத்தவங்க சொல்ற ‘ஆக்ஷனை’ மட்டும் கேட்டுட்டு இருந்தேன். ஆனா இப்போ முதல் முறையா, ‘பூக்கி’ படத்தின் மூலமா கேமராவுக்கு முன்னாடி வந்து ‘ஆக்ஷன்-கட்’ சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்.
இந்த வாய்ப்பு தந்த விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. என் மீது அவர் வைத்த நம்பிக்கையை நான் கண்டிப்பாக காப்பாற்றியிருக்கிறேன். இந்த படத்தை வெறும் ஆறு மாதங்களில் முடித்திருக்கிறோம். இன்றைய சூழலில் ஒரு படத்தை விரைவாக முடித்து, வணிக ரீதியாகவும், வெளியீட்டிலும் ஒழுங்காக கொண்டு வருவது எளிதல்ல. Zee நிறுவனம் இப்படத்தை வாங்கி விட்டது. அதை சாத்தியமாக்கிய தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சாருக்கு மிகப் பெரிய நன்றி. விஜய் ஆண்டனி சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவருடைய உழைப்புக்கு ஒரே விளக்கம் தான் “தொடர்ந்து முயற்சி செய். தவறாக இருந்தாலும் சரியாக வரும் வரை செய்” என்பார். இரவு, பகல் பாராமல் வேலை செய்யும் அந்த ஆற்றல் எங்களை எல்லோரையும் ஊக்கப்படுத்தியது. இந்த படத்தின் எழுத்தாளர் புதிய பரிதி, நாயகன் அஜய், நாயகி தனுஷா —இந்த மூன்று பேரும் இந்த படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு. இவர்களில்லாமல் இந்த படம் இப்படியாக உருவாகியிருக்காது. இயக்கக் குழு, இசை, எடிட்டிங், உடை வடிவமைப்பு, தயாரிப்பு குழு, அனைவரும் ஒரு குழுவாக அல்ல, ஒரு குடும்பமாக வேலை செய்தார்கள்.
அதனால்தான் இந்த படம் இவ்வளவு வேகமாகவும் அழகாகவும் உருவானது. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அனைவருக்கும், இந்த நிகழ்வுக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.
தொழில்நுட்பக் குழு விபரம்
தயாரிப்பு – Vijay Antony Film Corporation
தயாரிப்பாளர்கள் – ஃபாத்திமா விஜய் ஆண்டனி
இயக்கம், ஒளிப்பதிவு : கணேஷ் சந்திரா
எழுத்து – புதிய பரிதி
இசை, எடிட்டிங் : விஜய் ஆண்டணி
கலை இயக்கம் : பிரகதீஸ்வரன்
ஆடை வடிவமைப்பாளர் : மாளவிகா செல்வம்
நடனம் – ஹரிகிரண்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

