எலைட் டாக்கீஸ் கே. பாஸ்கரன் தயாரிப்பில் இயக்குநர் நாராயணன் இயக்கத்தில் அர்ஜுன் பிரபாகரன், ஆராத்யா, முனிஷ்காந்த், சரவண சுப்பையா, சுப்ரமணியம் சிவா, சுருளி, காயத்திரி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பேட்டில்’ .
ராப் பாடகராக இருக்கும் அர்ஜுன் பிரபாகரன் மிகப்பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சித்தோடு இருக்கிறார். ஒருநாள் சிறுமிருக்கு அர்ஜுன் செய்யும் உதவியை பார்த்து அவர் மீது நாயகி ஆராத்யா காதல் கொள்கிறார் . இந்நிலையில் உள்ளூர் அளவில் நடைபெறும் போட்டியில் நாயகன் அர்ஜுன் வெற்றி பெறுகிறார்.
அர்ஜுன் திறமையை பார்த்து தனிப்பாடல் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அவரை ஒப்பந்தம் செய்து கொள்கிறது. இதையடுத்து அர்ஜுன் பெரிய அளவில் வளர்ச்சி அடைவதோடு மக்கள் மனதிலும் இடத்தை பிடிக்கிறார். இதையடுத்து அந்நிறுவனம் வெளிநாட்டில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்காக அர்ஜுனை ஒப்பந்தம் செய்கிறது. இதே சமயம் ஆராத்யா பணிபுரியும் பள்ளியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.
பள்ளியில் நடக்கும் அவலங்களை ராப் பாடல் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற ஆராத்யா நினைக்க அர்ஜுன் பிரபாகரன் அதை நிறைவேற்ற நினைக்கிறார். ஆனால் இதற்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் முட்டுக்கடடை போடுகிறது.
இதை அறியும் தனியார் பள்ளி தாளாளர் சுப்ரமணிய சிவா ஆராத்யாவை கொலை செய்ய நினைக்கிறார். அவரை காப்பாற்ற நினைக்கும் அர்ஜுன் மிகபெரிய விபத்தில் மாட்டிக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார்.
இறுதியில் நாயகன் அர்ஜுன் பிரபாகரன் உயிர் பிழைத்தாரா ? இல்லையா? பள்ளி தாளாளர் சுப்ரமணிய சிவாவிற்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா ? இல்லையா? அர்ஜுன் – ஆராத்யா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே ’பேட்டில்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் அர்ஜுன் பிரபாகரன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். காதல், கடமை, பாசம் என அனைத்திலும் அசத்தலான நடிப்பபை கொடுத்திருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
ஆசிரியராக நடித்திருக்கும் நாயகி ஆராத்யா, அழகு தேவதையாக கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
பள்ளி தாளாளராக வில்லனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, வழக்கமான வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் சரவண சுப்பையா, அரசியல்வாதியாக நடித்திருக்கும் முனிஷ்காந்த், சுருளி, காயத்ரி என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜீவா, இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது . பின்னணி இசை கதையோடு பயணிக்கும் விதத்தில் உள்ளது. யுவராஜ்.ஆர், ஒளிப்பதிவு கதைக்கு துணை நிற்கிறது.
ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நாராயணன்.பி.ஏ இத்திரைப்படத்தில் ராப் பாடலை மட்டும் சொல்லாமல் தனியார் பள்ளிகளால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எந்த வகையில் எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’பேட்டில்’ (Battle) – வாழ்க்கை போராட்டம்
மதிப்பீடு : 2.75/5
நடிகர்கள் : அர்ஜுன் பிரபாகரன், ஆராத்யா, முனிஷ்காந்த், சரவண சுப்பையா, சுப்ரமணியம் சிவா
இசை : ஜீவா
இயக்கம் : நாராயணன்.பி.ஏ
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்