கிரிஜா வரதராஜ் தயாரிப்பில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், ராணவ், ரோஸ்மின், சம்பத் ராஜ், கஸ்தூரி, அர்ச்சனா, கிருத்திக் மோகன், அமிதா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பிரேக்ஃபாஸ்ட்’ .
கிருத்திக் மோகன், அமிதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். 3 மாதங்கள் கடந்த நிலையில் இருவரும் விவாகத்து கேட்டு நீதிமன்றம் செல்கிறார்கள். நீதிபதி இவர்களை ஆலோசனைக்காக மருத்துவரிடம் அனுப்பி வைக்கிறார்.
அங்கு மருத்துவராக இருக்கும் கஸ்தூரி இவர்களிடம் பேச இருவரும் ஒருவர் மீது ஒருவர் குறை கூறி சண்டை போட்டுக்கொள்கிறார்கள். இதனையடுத்து தொழிலதிபர் மகளுடைய கதையை சொல்ல கஸ்தூரி தொடங்குகிறார்.
பிரபல பிஸ்கட் கம்பெனியின் நிறுவனர் சம்பத் ராஜின் , மகள் நாயகி ரோஸ்மின், கம்பெனியை திறமையாக நிர்வகித்து வருகிறார். நாயகன் ராணவ் வேலையில்லாமல் இருக்க நாயகி தனது நிறுவனத்தில் வேலை கொடுக்கிறார்.
இந்நிலையில் ரோஸ்மின் நிறுவனத்தின் பிஸ்கட் சாப்பிட்டதால் குழந்தைகள் உடல்நிலை பாதிக்கபப்ட்டு மருத்துவமனையில் சேர்க்கப்டுகிறார்கள். இதையடுத்து ரோஸ்மின் கைது செய்யப்படுகிறார். ஆனால் அவர் மீது குற்றம் இல்லை என நாயகன் ராணவ் நிரூபித்து அவரை சிறையில் இருந்தது வெளியே கொண்டு வருகிறார்.
இதனையடுத்து iஇருவரும் காதலிக்க , இவர்களது காதலுக்கு நாயகியின் தந்தை எதிர்ப்பு தெரிவிக்கிறார். தந்தையின் எதிர்ப்பை மீறி ராணவை திருமணம் செய்து கொள்ளும் ரோஸ்மின், தனது நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியை அவருக்கு கொடுத்து, வசதியான வாழ்க்கையை அமைத்து கொடுக்கிறார்
இதே சமயம் ராணவ் அப்பாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட அப்பா, அம்மா இருவரையும் தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார் ராணவ் சில நாட்கள் கடந்த நிலையில் இருவரையும் நாயகி ரோஸ்மின் அனாதை இல்லத்தில் சேர்கிறார். இதனால் கோபமடையும் ராணவ் கர்ப்பமாக இருக்கும் ரோஸ்மினை அடித்து விட்டு பெற்றோர்களை தேடி செல்கிறார்.
இறுதியில் காணாமல் போன ராணவ் பெற்றோர்கள் கிடைத்தார்களா ? இல்லையா? ராணவ் – ரோஸ்மின் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? கஸ்தூரிக்கும் அமிதாவிற்கும் உள்ள தொடர்பு என்ன ? என்பதே ’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் பிக் பாஸ் புகழ் ராணவ், அறிமுக படம் போல இல்லாமல் எதிர்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பெற்றோர்களை சரியாக கவனிக்க முடியாமல் தவிப்பது , திமிர் பிடித்த மனைவிடம் மாட்டிக் கொண்டு முழிபப்து , பணம் இருந்தும் நிம்மதி இல்லாமல் தவிப்பது என ஒவ்வொன்றையும் உணர்ந்து உணர்வு பூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ரோஸ்மின், அறிமுக படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் அளவான நடிப்பால் கவனம் பெறுகிறார். பெரியவர்களை மதிக்காமல் ஆணவத்தில் ஆட்டிப்படைக்கும் பெண் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
மற்றொரு ஜோடியாக நடித்திருக்கும் கிரித்திக் மோகன் – அமிதா ரங்கநாத் ஜோடி, துறுதுறு வென இருக்கும் கதாபாத்திரத்தில் அழகாக நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சிரியபப்டுத்துகிறார்கள்.
நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் சம்பத் ராஜ், மருத்துவராக நடித்திருக்கும் கஸ்தூரி, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் அர்ச்சனா, நண்பராக வரும் ரவி மரியான் என படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கதற்கு இனிமை , பின்னணி இசை கதையோடு பயணிக்கும் விதத்தில் உள்ளது. எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
முன்பு காதல் எப்படி இருந்தது, இன்றைய தலைமுறை காதல் எப்படி இருக்கிறது என்பதை மையக்கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் காந்தி கிருஷ்ணா , இன்றைய சோசியல் மீடியா காலகட்டத்தில் அவசர காதல், கல்யாணம் , விவாகரத்து என்று வாழ்க்கை ஓடி கொண்டு இருக்கிறது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். புரிந்து கொண்டு விட்டு கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் .
மொத்தத்தில் ’பிரேக்ஃபாஸ்ட்’ – அவசர வாழ்க்கை
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : ராணவ், ரோஸ்மின், சம்பத் ராஜ், கஸ்தூரி, அர்ச்சனா, கிருத்திக் மோகன், அமிதா
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
இயக்கம் : காந்தி கிருஷ்ணா
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்