சொப்னா சினிமா மற்றும் வைஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் நாக் அஸ்வின் தயாரிப்பில் இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் அஹல்யா பம்ரூ, அயான், ஷாலினி கொண்டேபூடி, நிவேதா பெத்துராஜ், ராகுல் ரவீந்திரன் , சிவ நாராயணா, பெனர்ஜி, வாம்சி, சிறப்புத் தோற்றத்தில் விஜய் தேவரகொண்டா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சிங் கீதம்’ .
குபேரபுரம் எனும் இடத்தில் தங்கம் இருக்கிறது என தெரிய வர ஷாலினி கொண்டெபுடியும் அவரது அப்பாவும் வெளிநாட்டு வியாபாரி ஒருவருக்கு அந்நிலத்தை பல கோடி ரூபாய்க்கு விற்க நினைக்கிறார்கள். இதே சமயம் சிறையில் இருந்து வெளியே வரும் மற்றொரு உரிமையாளரான நாயகன் அயான் கே அங்கு வருகிறார்.
நிலத்தின் உண்மையான உரிமையாளர் என்பதால் விற்பதில் பாதி பங்கு கேட்கிறார். அந்த பகுதியில் உள்ள நிலத்தில் ஒரேயொரு மரம் மட்டுமே இருக்கிறது. அந்த மரத்தை வெட்டிவிட்டு தோண்டினால் தங்கம் கிடைக்கும் என முடிவெடுக்கிறார்கள். ஆனால் நாயகி அஹல்யா அந்த ஒற்றை மரத்தை தாய்போல. நினைப்பததால் அதை வெட்ட கூடாது என்று போராடுகிறார்.
நாயகியின் போராட்டத்தை மீறி மரம் வெட்டப்படுகிறது. அதன்பிறகு ஊரிலுள்ள அனைவரும் பேசுவதற்கு பதில் பாடுகிறார்கள். அவர்களால் பேசவே முடிவதில்லை. ஊரை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
இறுதியில் குபேரபுரம் மக்கள் சாபத்தில் இருந்து மீண்டு வந்தார்களா ? இல்லையா? மக்கள் ஊரை விட்டு வெளியே சென்றார்களா? இல்லையா? என்பதே ‘சிங் கீதம்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அயான், கலகலப்பாக இருக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அம்மா செண்டிமெண்ட், நாயகியுடனாக சின்ன சின்ன சண்டை, இயற்கையை காப்பாற்ற நினைக்கும் மனசு என அனைத்திலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கெளரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஹல்யா பம்ரூ துறுதுறுவென நடிப்பின் மூலம் கவனத்தை பெறுகிறார். இயற்கையையும் , மரங்களையும் காப்பாற்ற போராடும் இவரது குணம் பாராட்டுக்குரியது.
மற்றொரு உரிமையாளராக நடித்திருக்கும் ஷாலினி கொண்டேபூடி, அழகாக இருப்பதோடு அளவான நடிப்பால் கவனம் பெறுகிறார்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ், நாயகனின் aப்பாக நடித்திருக்கும் ராகுல் ரவீந்திரன், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சிவ நாராயணா, பெனர்ஜி, வாம்சி ஆகியோருடன் சிறப்பு தோற்றத்தில் தோன்றும் விஜய் தேவரகொண்டா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அனைத்து பாடல்களும் கதையை தாங்கி நிற்கிறது. பின்னணி இசை படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது. அங்கூர்.சி ஒளிப்பதிவு கதைக்கு பக்க பலமாக இருக்கிறது.
மரங்கள் , இயற்கை வளங்கள், மக்களை பாதுகாப்பது ஆகியவற்றை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாகியிருக்கும் இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ், மைக்கேல் மதன காமராஜன், பேசும் படம், மகளிர் மட்டும் போன்ற படங்களை இயக்கிய சிங்கீதம் சீனிவாச ராவ் தற்போது 94 வயதில் சிங் கீதம் என்ற மாறுபட்ட இசை திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்று அழகாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் ‘சிங் கீதம்’ – மக்களை கவரும்
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : அஹல்யா பம்ரூ, அயான், ஷாலினி கொண்டேபூடி, நிவேதா பெத்துராஜ், ராகுல் ரவீந்திரன்
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
இயக்கம் : சிங்கீதம் சீனிவாச ராவ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
