ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் எம் கே சாம்பசிவம் தயாரிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் பிரஜன், இவானா வருண் அதிரன், அனுபமா குமார், செந்தி, பத்மன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அந்தரன்’.
சென்னையில் நாயகி இவானாவை காதலிக்கும் மாணவனை இவானாவின் தந்தை அடித்து அந்த குடும்பத்தை ஊரை விட்டு விரட்டி அடிக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு இவானா ஆட்டோ டிரைவர் ஒருவரை காதலிக்கிறார். அவரை திருமணம் செய்ய நினைக்கும் போது அந்த நபர் திடீர் என கொலை செய்யப்படுகிறார்.
இவானாவின் தந்தை ஆறுதல் கூறுவதோடு தனது மருமகனுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கையில் அவருடைய மருமகன் தற்கொலை செய்து கொள்கிறார். இதனையடுத்து இவானாவை வேறொருவருக்கு திருமணம் செய்யது வைக்க தந்தை ஏற்பாடு செய்ய அவரும் லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்து விடுகிறார்.
இதே போல் இவானாவை திருமணம் செய்ய நினைப்பவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். இதுகுறித்து போலீஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரஜன் வழக்கை விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் இவானா மீது பிரஜனுக்கு காதல் மலர்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள்.
இறுதியில் பிரஜன் தொடர் கொலைகளை செய்வது யார் ? என்பதை கண்டுபிடித்தாரா ? இல்லையா ? பிரஜன் – இவானா இருவருக்கும் திருமணம் நடந்ததா ? இல்லையா ? என்பதே ‘அந்தரன்’ படத்தின் மீதிக்கதை.
போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரஜின் அதற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். காதல், செண்டிமெண்ட் என அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தை பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் இவானா வருண் அழகாக இருப்பதோடு அளவான நடிப்பால் கவனம் பெறுகிறார். தன்னை திருமணம் செய்ய நினைக்கும் அனைவரும் கொலை செய்வதை நினைத்து வருந்தும் இடம், பிரஜின் மீது கொள்ளவும் காதல், படத்தின் இறுதிக்காட்சியில் இவரது நடிப்பு கவனிக்கும் விதத்தில் உள்ளது.
நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும்எம் கே சாம்பசிவம் , அனுபமா குமார், பத்மன் , செந்தில்குமாரி, பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஹரி ஆர்.எஸ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் படத்திற்கு பக்க பலமாக உள்ளது . கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
தொடர் கொலைகளை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாகியிருக்கும் இயக்குநர் சந்தோஷ் ராவணன் இத்திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை கொலைகாரன் யார் ? என்பதை யூகிக்க முடியாத வகையில் கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்.ஒரு க்ரைம் கதையாக இல்லாமல் காதலையும் கலந்து விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘அந்தரன்’ – மர்மங்கள்
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : பிரஜன், இவானா வருண் அதிரன், அனுபமா குமார், செந்தி, பத்மன்
இசை : ஹரி ஆர்.எஸ்
இயக்கம் : சந்தோஷ் ராவணன்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
