டிரைடெண்ட் ஆர்ட்ஸ் – ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் சனத், மடோனா செபாஸ்டியன், இமயா.டி, வாட்ஸ்-அப் மணி, டெப்னிதா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஹார்ட்டின்’.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் தனது கல்லூரி நண்பன் வாட்ஸ்-அப் மணி, நடத்தும் உணவகத்தில் நாயகன் சனத் வேலை பார்த்து வருகிறார். ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணான இமயாவும் நண்பர்களாக பழகுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் சனத் மீது இமயாவுக்கு காதல் மலர்கிறது. ஆனால், அவரது காதலை சனத் ஏற்க மறுக்கிறார்.
அதற்கு காரணம் தனது முன்னாள் காதலி தந்த காதல் வலியே ஆகும் .அவரது முன்னாள் காதலி மடோனாவை பற்றி அறிந்துக் கொண்ட பிறகும் அவர் மீது காதலோடு இருக்கும் இமயாவை சனத்தும் காதலிக்கிறார்.
இமயாவின் காதல் மூலம் மீண்டும் தனது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு திரும்பும் சனத், ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு தனது சில வருட நினைவுகளை இழந்து விடுகிறார். இதனையடுத்து சனத் இமயா உடனான காதலை மறந்துவிடுவதோடு, தன்னுடைய முன்னாள் காதலியான மடோனாவை தேடி ஊட்டி செல்கிறார்.
நாயகனுக்கு மறந்த நினைவுகளை திரும்ப பெறுவதற்காக இமயாவும், வாட்ஸ்-அப் மணி உடன் செல்ல இவர்களை பார்த்து மடோனா அதிர்ச்சி அடைகிறார்.
இறுதியில் நாயகன் சனத்திற்கு மறந்த நினைவுகள் மீண்டும் கிடைத்ததா ? இல்லையா ? சனத் காதலை மடோனா ஏற்றுக்கொண்டாரா ? இமயாவுடன் திருமணம் நடந்ததா ? இல்லையா ? என்பதே ‘ஹார்ட்டின்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சனத், வேலை பார்க்கும் போது எபோதும் எதையோ பறிகொடுத்தவர் போலவும் கல்லூரி காலங்களில் உருகி உருகி காதலிப்பவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அறிமுக நாயகியாக நடித்திருக்கும் இமயா, புதியவர் போல இல்லாமல் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகனிடம் காதலை வெளிப்படுத்தும் விதம் அருமை, குறிப்பாக சனத் , மடோனா காதலை மீண்டும் காதலிப்பதை பார்த்து கோபப்படும் இடங்கள் ரசிக்க முடிகிறது.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் மடோனா செபாஸ்டியன், தனது லட்சியத்திற்காக காதலை இழப்பது சனத் காட்டும் அன்பில் மீண்டும் காதலித்து விடுவோமோ என்று நினைக்கும் இடங்களில் எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் வாட்ஸ்-அப் மணி வரும் காட்சிகள் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது. அவரது மனைவியாக நடித்திருக்கும் டெப்னிதா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு மெலோடி ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணிக்கிறது. முகேஷ்வரன்.வி பல ஊர்களின் அழகை அழகாக படம்பிடித்திருக்கிறார்.
ஒரு விபத்தால் சில வருட நினைவுகளை இழக்கும் நாயகன் , இன்னாள் காதல் மற்றும் முன்னாள் காதல் இரண்டில் எது கை கூடியது என்பதை மைய கருவாக வைத்து திரைக்கதை உருவாகியிருக்கும் இயக்குநர் கிஷோர் குமார் படத்தின் முதல்பாதியில் புதிய காதல் , விபத்து, சென்று கொண்டு சென்றவர் இரண்டாம் பாதியில் முன்னாள் காதலி, நினைவுகள், மகிழ்ச்சி என கதையை அழகாக கொண்டு சென்றிருக்கிறார்.
மொத்தத்தில் ‘ஹார்ட்டின்’ – காதலை தேடி
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : சனத், மடோனா செபாஸ்டியன், இமயா.டி, வாட்ஸ்-அப் மணி, டெப்னிதா
இசை : ராஜேஷ் முருகேசன்
இயக்கம் : கிஷோர் குமார்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
