எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரிப்பில் சவிர் சுதாகர் இயக்கத்தில் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட் பாலமுரளி , ஜெகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன் ,விவேக் பிரசன்னா ,சம்பத் ராம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் சீரிஸ் ஜூன் 26 முதல் ZEE5 தளத்தில் வெளியாகிறது.
கிராமத்தில் வைபவ் முருகேசன், வெங்கட் பாலமுரளி , ஜெகபர் சாதிக் இவர்கள் சேர்ந்து ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ என்ற அணியை உருவாக்கி உள்ளூரில் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார்கள். நாயகி லாவண்யாவும் நாயகன் வைபவ் முருகேசன் இருவரும் காதலித்து வர ஒரு சிறிய பிரச்சனையில் இருவரும் பேசி கொள்ளாமல் இருக்கிறார்கள்.
இந்நிலையில் அந்த ஊர் தலைவராக இருக்கும் மொட்டை ராஜேந்திரனின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரிய கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து பிரபல கிரிக்கெட் வீரர் டோனி விளையாடும் கடைசி போட்டியை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையோடு அந்த மூன்று இளைஞர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ராஜேந்திரன் திடீரென்று இறந்து விடுகிறார் .அதனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடக்காமல் போகிறது. அங்கு டீ கடை நடத்தும் விவேக் பிரசன்னாவிடம் ரூபாய் 10 ஆயிரம் வாங்கி கொண்டு கிரிக்கெட் பார்ப்பதற்கு அழைத்துக் கொண்டு செல்வதாகக் கூறியவர்கள் அவரை கழற்றிவிட்டு லாவண்யாவை சென்னைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
இந்நிலையில் மீதி பணத்திற்கு ஊர் பஞ்சாயத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாயை திருடி கொண்டு போகிறார்கள்.40 ஆயிரம் கொடுத்து கிரிக்கெட் மேட்ச் பார்க்க டிக்கெட் வாங்குபவர்கள் அதை பறிகொடுக்கிறார்கள். எப்படியாவது டோனி விளையாடும் இறுதி போட்டியை பார்க்க வேண்டும் என்பதற்காக கிரிக்கெட் சூதாட்டம் விளையாடும் சம்பத் ராமிக்கு உதவி செய்ய போகிறார்கள்.
இதே சமயம் ஊர் பஞ்சாயத்தில் பணத்தை திருடிய இவர்கள்தான் என ஊர் முழுவதும் தெரிய வருகிறது. இறுதியில் 4 பேரும் டோனியை பார்த்தார்களா ? இல்லையா? சம்பத்ராம் கிரிக்கெட் சூதாட்டத்தில் வெற்றி பெற்றாரா ? இல்லையா? ஊர் பஞ்சாயத்தில் திருடிய பணத்தை திருப்பி செலுத்தினார்களா? இல்லையா ? என்பதே ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் வெப் சீரியசின் மீதிக்கதை.
வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட் பாலமுரளி , ஜெகபர் சாதிக், ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக வைபவ் முருகேசன், லாவண்யா இருவரின் காதல் இயல்பாகவும் ஏற்க கூடியதாகவும் இருக்கிறது.
ஊர் தலைவராக நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன், டீக்கடை நடத்தும் விவேக் பிரசன்னா, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் சம்பத்ராம் , ஹாஸ்டல் மாணவர்கள், வார்டன் சரத் என இந்த கதையில் நடித்த அனைவரும் கதையோடு பயணிக்கும் விதத்தில் இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பரத், இசை கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது . பி.எம்.ராஜ்குமாரின் ஒளிப்பதிவு காட்சிகள் அழகாவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.
கிராமத்தில் இருந்து போட்டியை பார்பதற்காக இருப்பவர்கள் அதில் வெறி பெற்ரார்களா ? இல்லையா என்பதை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கி இருக்கும் சவிர் சுதாகர் இத்திரைக்கதையில் கிரிக்கெட் ஆசை, காதல், நட்பு, உணர்வுகள், கோபம் ஆகிவற்றை கலந்து ஒரு விறுவிறுப்பான கதையை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ – ஆடாம ஜெயிச்சோமடா
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட் பாலமுரளி , ஜெகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன் ,விவேக் பிரசன்னா
இசை : பரத்,
இயக்கம் : சவிர் சுதாகர்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)
