ஆர்.போத்திராஜ் தயாரிப்பில் இயக்குநர் ஆர்.வெங்கடரமணன் இயக்கத்தில் அஸ்வின் விஸ்வநாதன், ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா, அரி கரன், யோகேஷ்,, ஆர்.வெங்கடரமணன், டி.ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘முதற்கனல்’
நாயகன் அஸ்வின், அப்பா, அம்மா மற்றும் தங்கையுடன் காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். அங்கிருக்கும் பள்ளியில் படிக்கும் அஸ்வின் படிப்பில் முதல் மாணவனாக இருப்பதோடு மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்து வருகிறார்.
இந்நிலையில் அஸ்வின் அப்பா ஆண்டுதோறும் கல்லூரி நண்பர்களை பார்த்து பேசுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. தன்னுடன் மகனை அழைத்துச் செல்ல அங்கு கல்லூரி தோழியின் மகன் ராஜேஷுடன் அஸ்வினுக்கு நட்பு ஏற்படுகிறது. போதை பொருட்களை உபயோகிக்கும் ராஜேஷ் அதை அஸ்வினுக்கு கற்றுக் கொடுத்து விடுகிறார்.
இதையடுத்து அஸ்வின் வீட்டிற்கு தெரியாமல் பணத்தை திருடி போதை பொருட்கள் வாங்கி பயன்படுத்துகிறார். இதனால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகிறது. ஒரு கட்டத்தில் போதை பொருள் உபயோகிப்பது வீட்டிற்கு தெரிய அஸ்வின் ஊரை விட்டு ஓடி போகிறார்.
இறுதியில் அஸ்வின் மீண்டும் வீட்டிற்கு வந்தாரா ? இல்லையா ? போதை பொருள் பழக்கத்தில் திருந்து மீண்டு வந்தாரா? இல்லையா ? டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தை அடைந்தாரா? இல்லையா ? என்பதே ‘முதற்கனல்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின் விஸ்வநாதன் அறிமுக படம் போல இல்லாமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். போதை பழக்கத்திற்கு அடிமையானவராகவும், அதில் இருந்து மீண்டு வர முடியாமல் தவிப்பது , குடும்பத்தின் மீது வைத்திருக்கும் பாசம் , என அனைத்து உணர்வுகளை உள்வாங்கி உணர்வு பூர்வமாக நடிப்பபை கொடுத்திருக்கிறார்.
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் ராஜேஷ் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மா மீது வைத்திருக்கும் பாசம், போதைக்காக பக்கத்து வீட்டில் திருடக்கூட செல்லும் குணம் கொண்ட கதாபாத்திரத்தில் கவனத்தை பெறுகிறார்.
பெற்றோராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஆர்.போத்திராஜ் , வக்கீலாக வரும் இயக்குநர் ஆர்.வெங்கடரமணன், அஸ்வின் அம்மா , அப்பா மற்றும் தங்கை கதாபாத்திரத்தில் வருபவர்கள்.ராமசாமி, தனுஜா, இலக்கியா, அரி கரன், யோகேஷ் என மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் மீரா லால் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் கதையோடு பயணிக்கும் வகையில் உளள்து. கந்தசுவாமி கோபால் ஒளிப்பதிவு காட்சிகளோடு நம்மை பயணிக்க வைக்கிறது.
இன்றை காலகட்டத்தில் பள்ளியில் படிக்கும் மாணவர்களை பெறோர்கள் எப்படி கண்காணிக்க வேண்டும் என்ற கருத்தை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாகியிருக்கும் இயக்குநர் ஆர்.வெங்கடரமணன் இத்திரைப்படத்தில் போதை பொருள் பழக்கத்தால் மாணவர்களின் வாழ்க்கை எந்த நிலைக்கு செல்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இது போல சமூக அக்கறையோடு திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘முதற்கனல்’ – பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு
மதிப்பீடு : 3.30/5
நடிகர்கள் : அஸ்வின் விஸ்வநாதன், ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா, அரி கரன், யோகேஷ்,
இசை : மீரா லால்
இயக்கம் : ஆர்.வெங்கடரமணன்
மக்கள் தொடர்பு : கே.எஸ்.கே.செல்வகுமார்
