2M சினிமாஸ் மற்றும் D பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, மாறன், சரவணன், லிஸ்ஸி ஆண்டனி, லோகன் கண்ணன், நர்மதா, அருவி மதன், கன்யா பாரதி, கவிதா பாரதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’.
சென்னையில் அருவி மதன் கொலை செய்த குற்றத்திற்காக நீதிபதியான கன்யா பாரதி தூக்கு தண்டனை வழங்க இருக்கும் நிலையில் என்னவோ ஒன்று அவரை தீர்ப்பு எழுத விடாமல் தடுக்க இந்த வழக்கிற்கான இறுதி தீர்ப்பை மறுநாளைக்கு ஒத்தி வைக்கிறார்.
இந்நிலையில் நீதிபதி கன்யா தூக்கு தண்டனை கைதியான வெற்றியின் சுயசரிதை புத்தகத்தை படிக்க தொடங்குகிறார். 1972 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் வசிக்கும் லிசி ஆண்டனி தனது மகனான வெற்றியை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். இவரது கணவர் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு பொழுதை கழித்து வருகிறார்.
வெற்றி படித்த படிப்பிற்கான அரசாங்க வேலையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார். இதே சமயம் வட்டிக்கு பணம் கொடுக்கும் கவிதா பாரதி வட்டியை செலுத்தாததால் கேவலமாக பேசுகிறார். இதனையடுத்து வெற்றி நண்பரான மாறனிடம் உதவி கேட்ட திருட்டு வேலை செய்யும் மாறன் வெற்றிக்கு உதவி செய்கிறார்.
வீட்டிற்கு தெரியாமல் வெற்றி சிறு சிறு திருட்டுகளை செய்து வருகிறார். இதே ஊரில் வசிக்கும் நாயகி பிரிகிடாவை பார்த்ததும் காதல் கொள்ள இருவரும் பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்கிறார்கள். வெற்றி இரண்டு குழந்தைக்கு தந்தை ஆனதும் திருட்டு தொழிலை விட்டு விட்டு விவசாயம் செய்து வாழ நினைக்கிறார்.
கவிதா பாரதியின் வீட்டில் இருக்கும் தனது நில பாத்திரத்தை எடுத்து வருவதற்காக செல்லும் வெற்றி அங்கு நடக்கும் பிரச்சனையில் அவரை கொலை செய்து விடுகிறார். வெற்றி காவல் துறையிடம் சரணடைந்து விடுகிறார். நீதி மன்றம் வெற்றிக்கு தூக்கு தண்டனை கொடுத்து விடுகிறது.
இறுதியில் நீதிபதி கன்யா பாரதி மதனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தாரா ? இல்லையா? வெற்றி கவிதா பாரதியை கொலை செய்ய காரணம் என்ன ? என்பதே‘ லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் மீதிக்கதை.
அறிவுமதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெற்றி இயல்பான நடிப்பால் கவனம் பெறுகிறார். படித்த இளைஞராகவும் , அம்மா மீது பாசம் வைத்திருப்பவராகவும் , மனைவி மீது கொள்ளும் காதல் , என்றும் நீதிக்காக போராடும் குணம் என அனைத்திலும் வேறுபட்ட நடிப்பபை கொடுத்து கவனத்தை பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சாகா, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் , கணவன் மீது அக்கறை கொண்ட மனைவியாகவும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
நீதிபதியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கன்யா பாரதி எதார்த்தமான நடிப்பால் கவனம் பெறுகிறார். வில்லனாக நடித்திருக்கும் கவிதா பாரதி கொடூர குணம் கொண்ட கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார்.
சிறை அதிகாரியாக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே, ஆசிரியராக வரும் சரவணன் , வெற்றியின் அம்மாவாக வரும் லிசி ஆண்டனி, அருவி மதன், சுப்ரமணிய சிவா என படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. எம்.கே .பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு சிறைச்சாலை மற்றும் நீதிமன்ற , அழகான கிராமத்தை அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கொடுப்பது நியாயமா ? இல்லையா ? என்பதை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாகியிருக்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இத்திரைப்டத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் கதையை அதன் இறுதி தீர்ப்பு ஒரே நேர் கோட்டில் இணைவது போல திரைக்கதையை கொடுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் கதையை கொண்டு சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ – மனித நேயத்தை சொல்லும்
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, மாறன், சரவணன்
இசை : தர்புகா சிவா
இயக்கம் : தயாள் பத்மநாபன்
மக்கள் தொடர்பு : ரேகா
