பிரிட்டிஷ் ஆட்சியின் போது இருந்தே, ‘சவாரி’ என்ற ஒடுக்கப்பட்ட இன மக்கள் ஒரு சக்திவாய்ந்த இந்திய முதலாளித்துவக் குடும்பத்தின் அதிகாரத்தின் கீழ் அடிமைகளாக வாழ்ந்து வருகிறார்கள். சுதந்திர இந்தியாவில் மற்ற அனைவரும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தபோதும், இந்தச் சவாரி மக்களுக்கு மட்டும் சுதந்திரமோ, சமூகத்தில் உரிய அடையாளமோ கிடைக்கவில்லை. அவர்கள் வாழும் ‘பாரடைஸ்’ என்ற பகுதி சேறும் சகதியும், குப்பைகளும் நிறைந்த மிக மோசமான சூழலாகவே இருக்கிறது.
தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்று, சுதந்திர மனிதர்களாகத் தங்கள் சொந்த அடையாளத்துடன் வாழ அந்த மக்கள் ஏங்குகிறார்கள். ஆனால், அவர்களை ஆளும் ஆதிக்க முதலாளித்துவ வர்க்கம் (மோகன் பாபுவின் கதாபாத்திரம்) அவர்களைத் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க நினைக்கிறது. சவாரி மக்களுக்கு அடையாளம் கிடைத்துவிட்டால் தங்கள் அதிகாரம் போய்விடும் என்பதால், அவர்களைத் தந்திரங்களாலும் வன்முறையாலும் தொடர்ந்து ஒடுக்கி வைக்கிறது.
இந்த ஒடுக்கப்பட்ட சவாரி சமூகத்தில் பிறக்கிறான் நாயகன் நானி (இரட்டை ஜடையுடன் கூடிய ‘ஜடால்’ என்ற கதாபாத்திரம்). இவனது தாய் (சோனாலி குல்கர்னி) தன் வாழ்நாள் முழுவதும் தன் மக்களின் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் போராடியவர். தாயின் கொள்கைகளையும் தைரியத்தையும் மனதில் ஏந்தும் நானி, தன் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டு பொங்கி எழுகிறான். அடிமைச் சங்கிலியை உடைத்து, தன் இனத்திற்கு உரிய அங்கீகாரத்தையும் சுதந்திரத்தையும் மீட்டெடுக்கப் போர்க்கொடி தூக்குகிறான்.
ஒரு சாதாரண மனிதனின் அதிகாரத்திற்கு எதிரான இந்தப் போராட்டம் எளிதானதாக இல்லை. அதிகார வர்க்கத்தின் ஆட்களுக்கும், நானி தலைமையிலான சவாரி மக்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடிக்கிறது. கொடூரமான ஆதிக்க வர்க்கத்தின் அதிகாரத்தை எதிர்த்து, பல உயிர்ப் பலிகளுக்கு மத்தியில் நானி தன் மக்களின் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிந்தானா? என்பதே ‘தி பாரடைஸ்’ படத்தின் மீதிக்கதை
மொத்தத்தில்:’தி பாரடைஸ்’ – ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி
மதிப்பீடு : 2.5 / 5
நடிகர்கள் : நானி ,மோகன் பாபு ,ராகவ் ஜுயல்,கயாடு லோஹர் ,சோனாலி குல்கர்னி
இயக்கம் : ஸ்ரீகாந்த் ஒடேலா
இசை: அனிருத் ரவிச்சந்தர்
மக்கள் தொடர்பு: சதீஷ் (S2 Media)
