1986-களின் மெட்ராஸ். உள்ளூரிலேயே கள்ளச்சாராய வியாபாரம் செய்து கொண்டு, ஊரையே தன் மிரட்டலான ரௌடித்தனத்தால் பயந்து நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு லோக்கல் டான் தான் பத்தா (விஜய் சேதுபதி). வெளியில் முரட்டு ரௌடியாக வலம் வந்தாலும், வீட்டிற்குள் நுழைந்தால் மனைவி கனிமா (லிஜோமோல் ஜோஸ்), மகள் தேன்மொழி (சஹஸ்ரா ஸ்ரீ) ஆகியோரை உருகி உருகி நேசிக்கும் ஒரு சாதாரண குடும்பஸ்தன்.
மறுபுறம், பத்தாவின் ஏரியாவில் வசிக்கும் சபரி (சாய் பிரித்விராஜ்) என்ற பள்ளிச் சிறுவன், பத்தா நடுத்தெருவில் ஒருவரை ரத்தம் சொட்டச் சொட்ட அடிக்கும் வன்முறைக் காட்சியை நேரில் பார்க்கிறான். இதனால் பத்தாவைக் கண்டு மரண பயம் கொள்கிறான். பள்ளியில் சக நண்பர்கள் பத்தாவைப் பற்றி, “அவன் கூண்டில் சிங்கம் வளர்க்கிறான்”, “அவனுக்கு ஏழு உயிர்கள் இருக்கிறது” என எக்கச்சக்க ஃபேண்டஸி கதைகளைக் கட்டவிழ்த்து விட, சிறுவன் சபரிக்கு பத்தா ஒரு மனித உருவில் இருக்கும் பயங்கரமான விலங்காகத் தெரிகிறான்.
இந்தச் சூழலில், எதிர்பாராத ஒரு விசித்திரமான சம்பவத்தால் பத்தா ஒரு பாழடைந்த பள்ளி கழிவறைக்குள் (Restroom) மாட்டிக் கொள்கிறான். கதவு வெளியே பூட்டப்பட, அதைச் செய்தது வேறு யாருமல்ல… பத்தாவைக் கண்டு பயந்த அதே சிறுவன் சபரி தான்!
ஊரையே ஆட்டிப் படைத்த காட்டுச் சிங்கம் போன்ற ரௌடி பத்தா, ஒரு சிறிய பாத்ரூமுக்குள் கிட்டத்தட்ட 8 நாட்கள் அடைபட்டுக் கிடக்கிறான். எதிரும் புதிருமான இரு துருவங்கள் போன்ற ஒரு கொடூரமான ரௌடிக்கும், ஒரு பள்ளிச் சிறுவனுக்கும் இடையே நடக்கும் அந்த விசித்திரமான கண்ணாம்பூச்சி ஆட்டம் எங்கு போய் முடியும்? என்பதே ‘பத்தா’ திரைப்படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை!”
மொத்தத்தில் ‘பத்தா’ – மனதைத் தொடும்!
மதிப்பீடு : 3.5 / 5
நடிகர்கள்: விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், சாய் பிரித்விராஜ்
இயக்கம்: பாலாஜி தரணிதரன்
இசை: சாய் அபயங்கர்
மக்கள் தொடர்பு: யுவராஜ்
