நாயகன் குரு (சந்தீப் கிஷன்) தன் மறைந்த தாயாரின் நினைவாக ஒரு நூலகத்தையும், யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.ஆனால், ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் கடன் சுமையால் அதை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.கடன்காரர்களின் தொல்லை அதிகரிக்கவே, வேறு வழியின்றி ஷிவ் பண்டிட் நடத்தும் சூதாட்ட விடுதியில் பணயம் வைத்து விளையாடி, ஏமாற்றப்பட்டு தன் மொத்தப் பணத்தையும் இழக்கிறார்.
இதற்கிடையில், ஆந்திர மாஃபியா தாதா சம்பத்ராஜின் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ரகசிய லாக்கரைத் திறக்கும் ‘மண்டை ஓடு’ வடிவ பென்-டிரைவ் சாவி தற்செயலாக குருவின் கைகளில் கிடைக்கிறது. இந்தச் சாவியைக் கைப்பற்றத் துடிக்கும் மாஃபியா கும்பல், சூதாட்ட விடுதி உரிமையாளர் ஷிவ் பண்டிட் ஆகியோரிடமிருந்து தப்பித்து, குரு தன் கடன் பிரச்சினையைத் தீர்த்தாரா? என்பதே ‘சிக்மா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
மொத்தத்தில் ‘சிக்மா ‘- ரகசியச் சாவி!”
மதிப்பீடு : 2.5 / 5
நடிகர்கள்: சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம் ,சம்பத்ராஜ், ஷிவ் பண்டிட் , யோக் ஜேபி
இயக்கம்: ஜேசன் சஞ்சய்
இசை: தமன்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா
