ஆட்டோ டிரைவரான அசோக், பணக்கார வீட்டு பெண்ணான நிஷாவைக் காதலிக்கிறார். காதல் தோல்வி மற்றும் பிரிவால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அசோக், திடீரென ஒரு நாள் கையில் கூர்மையான கத்தி மற்றும் இரத்தக்கறைகளுடன் கடலூர் காவல் நிலையத்தில் சரணடைகிறார். தன்னைக் கொல்ல வந்த கூலிப்படை தலைவனையும், காதலி நிஷாவையும் வெட்டிக் கொன்றுவிட்டதாக வாக்குமூலம் அளிக்கிறார்.
வழக்கை விசாரணைக்கு எடுக்கும் இன்ஸ்பெக்டர் யுகன், அசோக்கின் முரண்பாடான பேச்சைக் கண்டு சந்தேகம் அடைகிறார். விசாரணையில், அசோக்கிற்கு தீவிர மனநலப் பாதிப்பு இருப்பதும், அதற்கு டாக்டர் அரவிந்த்ராஜ் சிகிச்சை அளித்து வருவதும் தெரியவருகிறது. இதற்கிடையே, கும்பகோணத்தைச் சேர்ந்த சங்கவி என்ற பெண்ணையும் தான் கொன்றுவிட்டதாக அசோக் கூற, அந்தப் பெண் நீதிமன்றத்தில் உயிரோடு வந்து நிற்கிறாள். அசோக் செய்யாத கொலைகளை ஏன் தானாக முன்வந்து ஒப்புக் கொள்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
மொத்தத்தில் ‘கிட்டி’ – மர்மம்!
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள்: அசோக் , யுகன்,சங்கவி, நிஷா, சிமுஅத்வானி , ஓய்.ஜி.மகேந்திரன், அரவிந்த்ராஜ்
இயக்கம்: நெடுமாறன்
இசை: காதர்
மக்கள் தொடர்பு – சரண்
