மும்பையிலுள்ள ஒரு முன்னணித் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் வினோத் (ஹரிஷ் கல்யாண்), புதிய நிகழ்ச்சி தயாரிப்புப் பணிக்காகக் கோவா கிளைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கு அவர் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான தேடலில் இருக்கும்போது, உள்ளூர் சுற்றுலா வழிகாட்டியான ஃபென்னியை (சித்தி இத்னானி) தற்செயலாகச் சந்திக்கிறார். ஃபென்னியின் காதலன் ரிச்சி (எம். ரினில்) ஒரு விபத்தின் காரணமாகப் பல நாட்களாகக் கோமா நிலையில் இருக்க, அவன் என்றாவது ஒருநாள் மீண்டு வருவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஃபென்னி தன் அன்றாட நிகழ்வுகளை வீடியோவாகப் பதிவு செய்து வருகிறாள். ஃபென்னியின் இந்த மாறாத அர்ப்பணிப்பைக் கண்டு நெகிழும் வினோத், அவளது வாழ்க்கைக் கதையையே தனது புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மையக்கருவாக மாற்ற முடிவு செய்து அவளுடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறார். ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மெதுவாக மறைந்து ஆழமான நட்பாக மாற, ஒருகட்டத்தில் வினோத் அவளது காதலில் விழுகிறார்.
இருப்பினும், ரிச்சியின் நினைவுகளிலேயே வாழும் ஃபென்னியால் வினோத்தின் காதலை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இந்த உணர்வுப் போராட்டத்திற்கு இடையே, எதிர்பாராதவிதமாகக் கோமாவிலிருந்து மீண்டு ரிச்சி மீண்டும் சுயநினைவு பெறுகிறான். அதன் பின்னர், தனது கடந்தகாலக் காதல் மற்றும் வினோத் காட்டிய புதிய தூய்மையான அன்பு ஆகிய இருவேறு உணர்வுகளுக்கு இடையே தவிக்கும் ஃபென்னியின் உளவியல் ரீதியான தத்தளிப்புகளும், வினோத்தின் உண்மையான காதல் இறுதியில் வென்றதா இல்லையா என்பதே ‘நூறு கோடி வானவில்’ படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
மொத்தத்தில் ‘நூறு கோடி வானவில்’ – உணர்வுப் போராட்டம்!
மதிப்பீடு : 4 / 5
நடிகர்கள் : ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி, கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத் ராஜ், எம். ரினில், வி.ஜே. பார்வதி மற்றும் பலர்
இசை : சித்து குமார்
இயக்கம் : சசி
தணிக்கை சான்றிதழ் : U/A
மக்கள் தொடர்பு (PRO) : சதீஷ் (AIM)
