நகரத்தை உலுக்கும் ஒரு கொடூரமான தொடர் கொலைச் சம்பவம் அரங்கேறுகிறது. வழக்கமான கொலையாளிகளைப் போலன்றி, பார்ப்பதற்கு மிகவும் சாதாரண, அப்பாவியான இளைஞனாகத் தோன்றும் ஈஸ்வரன் (நஸ்லென்) தான் உள்ளுக்குள் கொடூரமான மனநிலையைக் கொண்ட அந்தச் சீரியல் கில்லராக இருக்கிறான். அவனிடம் இருந்து உண்மையை வரவழைப்பதற்காக, எப்போதும் கோபம், எரிச்சல் மற்றும் யாருமே கணிக்க முடியாத விசித்திரமான விசாரணை அணுகுமுறை கொண்ட காவல் துறை அதிகாரியான இன்பராஜ் (சூர்யா) இந்த வழக்கிற்குள் நுழைகிறார். அவருக்கும் அந்த இளம் கொலையாளிக்கும் இடையே உளவியல் ரீதியான மோதல் (Mind Game) போய்க்கொண்டிருக்கும் வேளையில், அழகு, துடிப்பு மற்றும் நகைச்சுவை நிறைந்த மாயா (நஸ்ரியா) என்ற பெண்ணின் வருகை கதைக்குள் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. மாயாவின் பின்னணியில் ஒளிந்திருக்கும் ரகசியங்களும், இன்பராஜின் விசித்திர குணமும் இணைந்து இந்த துப்பறியும் விசாரணையை விறுவிறுப்பாக நகர்த்துகின்றன.
இருப்பினும், அவர்கள் இருவருமே எதிர்பாராத வேளையில், இது வெறும் சாதாரண மனிதர்களால் செய்யப்பட்ட கொலைகள் அல்ல என்பது தெரியவருகிறது. இந்த விவகாரத்திற்குப் பின்னால் ஒரு அமானுஷ்ய மாந்தீரிகச் சதியும், கற்பனை உலகப் (Fantasy) பின்னணியும் இருப்பது வெளிச்சத்திற்கு வருகிறது. கதாபாத்திரங்களின் பலவீனங்களையே அவர்களது பலமாக மாற்றி, இயக்குநர் கதையை ஒரு பிரம்மாண்டமான ஃபேண்டஸி உலகிற்குள் கொண்டு செல்கிறார். இறுதியில், தீய சக்திகளின் சதியை முறியடித்து, அந்த இளம் கொலையாளி ஈஸ்வரனின் கொடூரத் திட்டங்களைத் தடுத்து, இன்பராஜும் மாயாவும் சேர்ந்து எவ்வாறு இந்த அமானுஷ்ய வழக்கை முடிவுக்குக் கொண்டு வருகிறார்கள் என்பதே ‘சீன்’ படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
மொத்தத்தில் ‘சீன்’ – புதிரான விசாரணை!
மதிப்பீடு : 4 / 5
நடிகர்கள் : சூர்யா, நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால், ஜான் விஜய், ராஜ் பிரியன்
இசை : சுஷின் ஷியாம்
இயக்கம் : ஜித்து மாதவன்
தணிக்கை சான்றிதழ் : U/A
மக்கள் தொடர்பு (PRO) : சதீஷ் குமார் (S2)
