ஸ்ரீ முத்துமாரியம்மன் பிலிம்ஸ் (Sri Muthumariamman Films) நிறுவனம் சார்பில் சரவணன் பாலு தயாரித்திருக்கும் திரைப்படம் ‘சிவப்பு மனிதர்கள்’.
இப்படத்தில் கதையின் நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக் நடிக்க, நாயகியாக மீனாட்சி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் லிவிங்ஸ்டன், வனிதா விஜயகுமார், சோனா, கஞ்சா கருப்பு, ரேஷ்மா, ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ, பெஞ்சமின், பாரதி கண்ணன், வேல்முருகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, கதையின் நாயகி மீனாட்சி சங்கரின் சகோதரனாகவும், சமூக நீதிப் போராளியாகவும் ஆதேஷ் பாலா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்:
- கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்: அன்பு சரவணன்
- ஒளிப்பதிவு: தங்க பாண்டியன்
- கலை: பத்மநாபா கதிர்
- இசை: விஜய் மந்தாரா
- பாடல்கள்: கவிஞர் விவேகா, அறிமுகக் கவிஞர் ஏ.மு. ராதா, இயக்குனர் அன்பு சரவணன்
- படத்தொகுப்பு (Editing): ராஜ் கீர்த்தி
- நடனம்: ரவிதேவ், பவர் சிவா
- சண்டைப் பயிற்சி: தீப்பொறி வித்யா, ஸ்டண்ட் ஜாகிர்
- தயாரிப்பு நிர்வாகம்: கார்த்திக் ரெட்டி
- தயாரிப்பு: சரவணன் பாலு
குடும்பம், காதல், மோதல் மற்றும் சமூகப் பார்வையோடு தயாராகி இருக்கும் ‘சிவப்பு மனிதர்கள்’ திரைப்படத்தை வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

