இயக்குநர் சந்தோஷ் தவாகர் இயக்கத்தில், 2027 ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பரிந்துரையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம் ‘கோந்தல்’ (Gondhal).
மகாராஷ்டிராவின் கிராமம் ஒன்றில், புதுமணத் தம்பதியருக்காக இரவு முழுவதும் விடிய விடிய நடைபெறும் ‘கோந்தல்’ என்ற பாரம்பரியச் சடங்கையும், அந்த ஊரின் அதிகார அமைப்பையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. ஊரில் உள்ள வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஆனந்த் என்ற இளைஞரைத் திருமணம் செய்து கொள்கிறாள் சுமன் (இஷிதா தேஷ்முக்). ஆனால், அந்தத் திருமண வாழ்க்கையில் அவளுக்குத் துளியும் விருப்பமில்லை. அவளது மனம் முழுக்க, அந்த ஊரில் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் சஹிபா (யோகேஷ் சோஹோனி) என்ற நாட்டுப்புறக் கலைஞரிடமே இருக்கிறது.
இதற்கிடையில், ஊர்த் தலைவரின் மகனான சர்ஜே ராவுக்கும் (நிஷாத் போயர்) சுமன் மீது தீராத ஆசையும், காதலும் இருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு நடைபெறும் அந்த ‘கோந்தல்’ இரவுச் சடங்கில், ஊரே கூடியிருக்க ஆட்டமும் பாட்டமும் களைகட்டுகிறது. இந்தச் சூழலில், மற்றவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாழாமல் தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க நினைக்கும் சுமன், ஒரு துணிச்சலான முடிவை எடுக்கிறாள். ஊர்த் தலைவரின் மகன் சர்ஜே ராவின் அதிகார மமதையையும், தன் மீது அவன் வைத்திருக்கும் பலவீனத்தையும், அந்த இரவுச் சடங்கு மீதான அவனது ஈடுபாட்டையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகிறாள். இதன் மூலம் தன் கணவனிடமிருந்து விடுபட்டு, தான் விரும்பிய வாழ்க்கையை அடைய அவள் ஒரு ரகசிய வியூகம் அமைக்கிறாள். இறுதியில் சுமனின் அந்த ரகசியத் திட்டம் நிறைவேறியதா, சடங்கின் மேளதாளங்களுக்கு இடையே அந்த இரவில் வெளிச்சத்திற்கு வரும் ஒவ்வொரு மனிதரின் நிஜ முகம் என்ன என்பதே பரபரப்பும் திருப்பங்களும் நிறைந்த ‘கோந்தல்’ படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
மொத்தத்தில் ‘கோந்தல்’ – இரவுப் புதிர்!
மதிப்பீடு : 4 / 5
நடிகர்கள் : கிஷோர் கடம், இஷிதா தேஷ்முக், யோகேஷ் சோஹோனி, நிஷாத் போயர், சுரேஷ் விஸ்வகர்மா
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : அமலேந்து சௌத்ரி
தயாரிப்பு : சந்தோஷ் தவாகர், தீக்ஷா தவாகர்
இயக்கம் : சந்தோஷ் தவாகர்
தணிக்கை சான்றிதழ் : U/A
மக்கள் தொடர்பு (PRO) : சுரேஷ் சந்திரா & டீம் டி’ஒன் (Team D’one)
