பி டி ஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலசந்திரன் தயாரிப்பில் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், ஹரிஷ் பெராடி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ரெட்ட தல’ .
பாண்டிச்சேரியில் பெற்றோர் இல்லாமல் இருக்கும் காளி (அருண் விஜய்) மற்றும் கதாநாயகி ஆந்த்ரே (சித்தி இத்னானி) ஆகிய இருவரும் சிறுவயதில் இருந்தே காதலிக்கிறார்கள். ஆனால், சித்தி இத்னானி அருண் விஜயை விட பணத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.
இந்நிலையில் கோவாவில் இருந்து இங்கு வந்திருக்கும் பணக்காரரான உபேந்திராவை (அருண் விஜய்) காளி (அருண் விஜய்) மற்றும் ஆந்த்ரே (சித்தி இத்நானி) சந்திக்கிறார்கள். காளியை போன்ற தோற்றம் கொண்ட உபேந்திராவின் பணத்தின் மீது ஆசைப்படும், சித்தி இத்னானி தன் காதலர் காளி (அருண் விஜய்) மூலம் உபேந்திராவை (அருண் விஜய்) கொலை செய்து விடுகிறார்.
மறுநாள் உபேந்திரா (அருண் விஜய்) ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக 14 நாள் சிறையில் இருந்து பாரோலில் வந்தவர் என்றும் இதே வேளையில் ஹரிஷ் பெராடி உபேந்திராவை (அருண் விஜய்) கொலை செய்ய தேடி வருகிறார். என்பதை அறிந்து காளி (அருண் விஜய்) அதிர்ச்சி அடைகிறார்.
இறுதியில் காளி (அருண் விஜய்) எதிரிகளிடம் இருந்து உயிர் பிழைத்தாரா ? இல்லையா? சிறைக்கு சென்றாரா ? காளி – ஆந்த்ரே இருவரும் திருமணம் நடந்ததா ? இல்லையா ? என்பதே
’ரெட்ட தல’ படத்தின் மீதிக்கதை.
காளி – உபேந்திரா என்ற இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் அருண் விஜய் அதற்காக கடின உழைப்பை கொடுத்திருக்கிறார். நடை, உடை, பேச்சு மற்றும் தோற்றம் என அனைத்திலும் வேறுபாட்டை நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்,
நாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி, பணத்திற்காக கொலை செய்ய கூட தயங்காத கதாபத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ், யோகி சாமி ஆகியோர் நடிப்பு கதைக்கு ஏற்றவாறு உள்ளது.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில், தனுஷ் குரலில் “கண்ணம்மா..” பாடல் திரும்ப கேட்கும் வகையில் உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. டிஜோ டாமியின் ஓளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் உள்ளது.
ஆசையே அழிவிற்கு காரணம் என்ற மைய கருவை வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இத்திரைப்படத்தில் முதல் பாதி படம் வேகமாக செல்ல, இரண்டாம் பாதி யாரும் யூகிக்க முடியாத வகையில் கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்.
மொத்தத்தில் ’ரெட்ட தல’ பேராசை பெரும் நஷ்டம்
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : அருண் விஜய், சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், ஹரிஷ் பெராடி
இசை : சாம்.சி.எஸ்
இயக்கம் : கிரிஷ் திருக்குமரன்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)