எம்.எல்.புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆறுமுகம் மதப்பன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வேல் குமரேசன் இயக்கத்தில் ஸ்ரீ தேவா, , நிவேதா, வேல ராமமூர்த்தி, சரவண சுப்பையா, சரவண சக்தி, ரிந்து ரவி, நவீன் கிருஷ்ணா, வைகுண்ட செல்வன், விஜயன், திவ்யா,ஜெயந்தி, சிந்துஜா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’வசூல் மன்னன்’ .
ஏழை குடும்பத்தை சேர்ந்த நாயகன் ஸ்ரீ தேவா, தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரியான ஸ்ரீ தேவா விற்கு சரியான வேலை இல்லாததால் ஊர் முழுவதும் கடன் வாங்கி வருகிறார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் அனைவரும் இவரை துரத்துகிறார்கள்.
இந்நிலையில் சிறுவதில் இருந்தே போலீசாக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் நாயகி நிவேதா அதை நிறைவேற்றுவதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்ய தாயாக இருக்க இதை அறிந்து கொண்ட ஸ்ரீதேவா, அவரிடம் பொய் சொல்லி பணம் பறிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.
ஒரு கட்டத்தில் நாயகி நிவேதாவின் அப்பா ஊரில் பெரிய தாதா என ஸ்ரீதேவாவிற்கு தெரிய வருகிறது. இறுதியில் நாயகன் ஸ்ரீதேவா, நாயகி நிவேதாவிடம் இருந்து பணத்தை அபகரித்தாரா? இல்லையா? ஸ்ரீதேவா ஊர் மக்களிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினாரா ? இல்லையா? என்பதே ’வசூல் மன்னன்’ படத்தின் மீதிக்கதை.
சின்னத்திரை மூலம் பிரபலாமானவர் நாயகன் ஸ்ரீதேவா கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு அனைவரையும் ஏமாற்றும் காட்சிகள் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது.. காதல், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறப்பான நடிப்பபை வழங்கியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நிவேதா எதார்த்த நடிப்பாளால் கவனத்தை ஈர்க்கிறார் அழகு தேவதையாக கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். நாயகனின் மாமாவாக நடித்திருக்கும் சரவண சக்தி, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சரவண சுப்பையா, ரிந்துரவி, நவீன் கிருஷ்ணா, வைகுண்ட செல்வன், விஜயன், திவ்யா, ஜெயந்தி, சிந்துஜா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர் அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பரணி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமை. பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது. ஆர்.என்.சிவகுமார் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.
காதல், காமெடி, நிருபர் கொலை ஆகியவற்றை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் வேல் குமரேசன் இத்திரைப்படம் கதாநாயகனை சுற்றி நடந்தாலும் கடன் வாங்குவதால் என்னென்ன பிரச்சனைகளை எத்ரிக்கொள்ள வேண்டி இருக்கிறது. என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ’வசூல் மன்னன்’ – வசூல் மழையில்
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : ஸ்ரீ தேவா, , நிவேதா, வேல ராமமூர்த்தி, சரவண சுப்பையா, சரவண சக்தி
இசை : பரணி
இயக்கம் : வேல் குமரேசன்
மக்கள் தொடர்பு : விஜய முரளி & கிளாமர் சத்யா