நேசம் என்டர்டைன்மெண்ட் , ஜி கே எஸ் புரடக்ஷன்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, ஜெயஸ்ரீ பினுராஜ், ஈஷா,, மாளவிகா மனோஜ், அனு ஸ்ரேயா ராஜன், தனாஸ்ரீ சுதாகரன் , ரேகா குமணன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஹபீபி’ .
1980 ஆம் காலகட்டத்தில் கடையநல்லூர் பகுதியில் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த கஸ்தூரி ராஜா நெசவுத் தொழில் செய்கிறார் இவருடன் இவரது தம்பியும் இதே வேலை செய்து வருகிறார். கூட்டு குடும்பமாக வாழும் இவர்களின் குடும்பத்திற்கான பொருளாதார தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இதனையடுத்து கஸ்தூரிராஜா தம்பி வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறார். கஸ்துரிராஜாவின் மகன் ஈஷா, தன்னுடன் படிக்கும் மாணவி மாளவிகாவை காதலிக்கிறார். ஒரு நாள் இரவு மாளவிகாவை பார்ப்பதற்காக ஈசா அவரது வீட்டிற்கு செல்ல ஊர் மக்கள் பிடித்து பஞ்சாயத்தில் நிற்க வைக்கிறார்கள்.
இறுதியில் ஈஷா, மாளவிகா காதல் கைக் கூடியதா ? இல்லையா? குடும்பத்தை காப்பாற்ற வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதிக்கதை.
முகமது யூசுப் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கஸ்தூரிராஜா குடும்பத்த தலைவராக அனுபவ நடிப்பால் கவர்கிறார். தன கண் முன்னே நெசவுத் தொழில் அழிவதை பார்த்து கண் கலங்கும் இடத்தில் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கிறார்.
கதைநாயகனாக நடித்திருக்கும் ஈஷா, பள்ளி, வாலிபர்,, நடுத்தர வயது உடையவர் என்று ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப உடல்மொழி, பேச்சு , நடை , உடை என அனைத்திலும் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் மாளவிகா மனோஜ், தனாஸ்ரீ ஆகிய இருவரும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். அனுஸ்ரேயா ராஜன்,ஜெயஸ்ரீ பினுராஜ்,ரேகா குமணன்,மலர் கைசின்,ஸ்மத் பானு, அருள்குமார்,சன்சாகுல், சிறுவன் தீனன் மற்றும் சிறுமி தீக்ஷாஸ்ரீ என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு அந்த காலகட்டத்திற்கு நம்மை கொண்டு செல்கிறார்.
நெசவுத்தொழில், கூட்டுக்குடும்பம், காதல், வெளிநாட்டு பயணம் ஆகியவற்றை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன் இத்திரைப்படத்தில் குடும்பத்திற்காக வெளிநாட்டிற்கு செல்பவர்கள் எதையெல்லாம் இழக்கிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’ஹபீபி’ – வாழ்க்கை பயணம்
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : கஸ்தூரி ராஜா, ஜெயஸ்ரீ பினுராஜ், ஈஷா,, மாளவிகா மனோஜ்,
இசை : சாம்.சி.எஸ்
இயக்கம் : மீரா கதிரவன்
மக்கள் தொடர்பு சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்
