வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்யா , நிகிலா விமல்,முரளி கோபி ,ரெஜினா கசாண்ட்ரா, சுனில், இந்திரன்ஸ் , சித்திக், அஜய்,போஸ் வெங்கட், தேவ் மோகன் , ரென்ஜி பணிக்கர், அஞ்சலி பி. நாயர், சாந்தி பாலச்சந்திரன், அச்யுத்குமார், சரத் அப்பானி, விஜயராகவன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அனந்தன் காடு’ .
1989-ல் நடக்கும் கதை தமிழீழ போராளியான ஆர்யா இலங்கை படையினரால் தன் குடும்பத்தை இழந்து விடுகிறார். அதன் பிறகு கேரளா வருகிறார். அம்மாநில முதலமைச்சர் தனக்கு எதிராக செல்படுபவர்களை சிறிய கூலிப்படை கும்பலை வைத்து கொலை செய்கிறார். அந்த கும்பலில் ஆர்யா போய் சேர்கிறார்.
அந்தக் கூலிப்படைக்கு முதலமைச்சருக்கு இன்னொரு வரை கொலை செய்யும் வேலையைக் கொடுக்கிறார். அதை ஆர்யாவே முன்னின்று செய்கிறார். ஒரு கட்டத்தில் இந்த பிரச்னை சிபிஐ வரை செல்கிறது. ரவுடி கூட்டம் பிடிபட்டால் தன்னை பற்றி அனைவருக்கு தெரிய வரும் என்று எண்ணும் முதல்வர் ரவுடி கூட்டத்தை போலீசை வைத்து என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார்.
இறுதியில் ரவுடி கூட்டத்தை என்கவுண்டரில் இருந்து ஆர்யா காப்பாற்றினாரா? இல்லையா? முதல்வரின் உண்மையான முகம் வெளியே தெரிந்ததா ? இல்லையா? என்பதே ‘அனந்தன் காடு’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஆர்யா துடிப்பு மிக்க இளைஞராக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் , செண்டிமெண்ட் , எமோஷனால் என அனைத்திலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கூலிப் படையினராக நடித்திருக்கும் முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ் மற்றும் அப்பானி சரத் ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்து அனைவரின் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.
காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் சுனில், கேரள முதல்வராக நடித்திருக்கும் விஜயராகவன், சாந்தி பாலச்சந்திரன், ரெஜினா கசாண்டரா, ஜெயின் பவுல், நிகிலா விமல், அச்யூத் குமார் என மற்ற வேடங்களில் நடத்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத்தின் பின்னணி இசை படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு அன்றைய காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
உண்மை சம்பவத்தை மைய கருவாக வைத்து திரைக்கதையை நகரத்து சென்றிருக்கும் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கதையை கொண்டு சென்றிருக்கிறார். அரசியல் ஆட்டத்தை அழகாவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘அனந்தன் காடு’ – போராட்டம்
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : ஆர்யா , நிகிலா விமல்,முரளி கோபி ,ரெஜினா கசாண்ட்ரா, சுனில், இந்திரன்ஸ்
இசை : பி.அஜனீஸ் லோக்நாத்
இயக்கம் : ஜியேன் கிருஷ்ணகுமார்
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்
