சீனாவின் மிகவும் பிரபலமான அனிமேஷன் தொடர்களில் ஒன்றான Boonie Bears வரிசையின் 12-வது திரைப்படமாக உருவாகியுள்ள “Boonie Bears: The Hidden Protector”, இந்த முறை சீன பாரம்பரிய நாட்டுப்புறக் கதைகள், மாய உலகம் மற்றும் குடும்ப பொழுதுபோக்கை இணைத்து ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது.
சீனாவின் கிழக்கு பகுதியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். புத்தாண்டை கொண்டாடுவதற்காக மக்கள் காத்திருக்கிருக்க அவர்களை அழிப்பதற்காக கொடூர அரக்கன் அங்கு வர அவனை கரடி அடித்து விரட்டுகிறது. தான் மீண்டும் வருவேன் என்று அந்த அரக்கன் கூறி செல்கிறார்ன்.
இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு பிரையர், பிராம்பிள் மற்றும் விக் ஆகியோர் நண்பர்களாக இருக்கிறார்கள். ஒருநாள் மர்மமான சக்திகள் இவர்களுக்கு கிடைக்கிறது. இந்த சத்தியின் மூலம் இவர்கள் மனிதர்களும் மாய உயிரினங்களும் வாழும் புதிய உலகிற்குள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
அங்கு உருவாகும் பேராபத்தை தடுக்க நினைக்கும் இவர்களுக்கு அதில் வெற்றி பெற்றார்களா ? இல்லையா? என்பதே ‘பூனி பியர்ஸ்: தி ஹிடன் ப்ரொடெக்டர்’ படத்தின் மீதிக்கதை.
திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் அதன் வண்ணமயமான காட்சியமைப்பு. மாய உலகத்தின் வடிவமைப்பு, அதிரடியான சாகச தருணங்கள் மற்றும் குழந்தைகளை கவரும் கற்பனை அம்சங்கள் அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீன புத்தாண்டு மரபுகளும், நியான் (Nian) புராணக் கதையும் கதையுடன் இயல்பாக இணைக்கப்பட்டிருப்பது படத்திற்கு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகிறது.
உணர்வுப்பூர்வமான தருணங்களும், நட்பு மற்றும் குடும்ப உறவுகளை வலியுறுத்தும் காட்சிகளும் குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோர்களையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. பிரையர் தனது பொறுப்புகள் மற்றும் அடையாளத்தை எதிர்கொள்ளும் பயணம் கதைக்கு கூடுதல் ஆழத்தை வழங்குகிறது.
சில இடங்களில் கதை குழந்தைகளை மையமாகக் கொண்டு நகர்வதால் பெரியவர்களுக்கு கணிக்கக்கூடியதாக தோன்றலாம். இருந்தாலும், வேகமான திரைக்கதை, நகைச்சுவை மற்றும் கண்கவர் அனிமேஷன் காரணமாக படம் தனது பொழுதுபோக்கு மதிப்பை இழக்கவில்லை.
மொத்தத்தில், “Boonie Bears: The Hidden Protector” என்பது கற்பனை, நகைச்சுவை, சாகசம் மற்றும் குடும்ப உணர்வுகளை அழகாக கலந்த ஒரு தரமான அனிமேஷன் திரைப்படம். குழந்தைகளுடன் குடும்பமாக ரசிக்க ஏற்ற, வண்ணமயமான திரை அனுபவத்தை வழங்கும் இந்தப் படம் அனிமேஷன் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
பூனி பேர்ஸ்: தி ஹிடன் புரொடெக்டர் – குழந்தைகளுக்கான சாகச உலகம்
மதிப்பீடு: 3.5 / 5
