கலாமயா சினிவெர்ஸ் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் தயாரிப்பில், இயக்குநர் சஜீவ் பழூர் எழுத்து இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘என்ன விலை’.
ராமேஸ்வரம் கடற்கரையில் பக்தர்கள் செலுத்தும் நாணயங்களை நீரில் மூழ்கி எடுத்தும், மீன்பிடித்தும் எளிய வாழ்க்கை வாழ்பவர் தவசி முத்து (கருணாஸ்). மனைவி (விஜயலட்சுமி வீரமணி), தங்கை (சாஷா) மற்றும் இரு குழந்தைகளுடன் வசிக்கும் இவருக்கு, ஒருநாள் கடலில் விலைமதிப்பற்ற பழமையான தங்க நகை ஒன்று கிடைக்கிறது.
அதை நேர்மையாகக் காவல் கான்ஸ்டபிள் மோகன்ராமிடம் ஒப்படைக்கிறார். ஆனால், பேராசை கொண்ட மோகன்ராம் அதிலிருந்த பச்சை நிறக் கல்லை மட்டும் தனியாக எடுத்து, வியாபாரி கொட்டாச்சியின் உதவியுடன் ₹3 லட்சத்திற்கு விற்கிறார். பின்னர் அந்த நகையை மீண்டும் கருணாஸிடமே கொடுத்து வீட்டில் வைக்கச் சொல்கிறார். ஆபத்தை உணர்ந்து அதை மீண்டும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் செல்லும் கருணாஸ் மீது, கோயில் நகையைத் திருடியதாகப் பழி சுமத்திச் சிறையில் அடைக்கிறார் மோகன்ராம்.
கருணாஸுக்காகக் களமிறங்கும் வழக்கறிஞர் (நிமிஷா சஜயன்), தன் திறமையான வாதத்தால் அவருக்கு ஜாமீன் பெறுகிறார். வழக்கு தொல்பொருள் மற்றும் புதையல் துறைக்கு மாறுகிறது. “கடலில் கிடைக்கும் பொருட்கள் அரசுக்கே சொந்தம்” என்று அரசு வழக்கறிஞர் வாதிட, “கடல் சார்ந்த பொருட்கள் அதை எடுக்கும் மக்களுக்கே சொந்தம்” என நிமிஷா எதிர்த்துப் போராடுகிறார்.
தமிழகம் முழுவதும் மீனவர்களும் மாணவர்களும் கருணாஸிற்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதிக்கின்றனர். பழிசுமத்தப்பட்ட கருணாஸை அரசு அதிகாரப்பூர்வமாக ‘நிரபராதி’ என அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வாதிடுகிறார் நிமிஷா. இறுதியில், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பு என்ன? என்பதே மீதிக்கதை.
மொத்தத்தில் ‘என்ன விலை’ – தர்மத்தின் குரல், நீதியின் போராட்டம்.
மதிப்பீடு : 4/5
நடிகர்கள்: கருணாஸ் , நிமிஷா சஜயன் ,கமலேஷ் ஜெகன் ,விஜயலட்சுமி வீரமணி ,சஷா சிவகுமார்,மொட்டை ராஜேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன்
இயக்குநர் & கதையாசிரியர்: சஜீவ் பழூர்
இசை: சாம் சி.எஸ்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா
