ஆர். மாதேஷ் எழுத்து மற்றும் இயக்கத்தில், ‘புன்னகை பூ’ கீதா தயாரிப்பில், விமல், ஸ்ரேயா சரண் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சண்டக்காரி’.
லண்டனில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கும் கோபக்காரப் பெண் ஸ்ரேயாவிடம் உதவி அதிகாரியாக வேலைக்குச் சேர்கிறார் தங்கப் பதக்கம் வென்ற பொறியியல் பட்டதாரியான விமல். தான் உருவாக்கிய புதிய செயலியை (App) அறிமுகப்படுத்தவே விமல் இந்த வேலையில் சேர்கிறார்.
இதனிடையே, ஸ்ரேயாவின் யுகே (UK) விசா காலம் முடிவடைவதால், புதிய விசா பெற அவர் இந்தியா திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது அவருடைய சி.இ.ஓ (CEO) கனவுக்கு முட்டுக்கட்டையாக அமைகிறது. இந்தச் சிக்கலிலிருந்து தப்பிக்க, லண்டனில் நிரந்தரக் குடியுரிமை (PR) வைத்துள்ள விமலைப் போலித் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிடுகிறார் ஸ்ரேயா. அதேநேரம், ஸ்ரேயாவின் தொழில் எதிரியுடன் கைகோர்க்கும் விமல், இந்தத் திருமண நாடகத்தின் மூலம் அவரை ஏமாற்றி அவருடைய பதவியுயர்வைத் தடுக்கத் திட்டமிடுகிறார்.
ஸ்ரேயாவின் நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளும் விமல், அதற்குப் பதிலாக ஸ்ரேயா தன் சொந்த ஊரான தமிழ்நாட்டிற்கு வந்து தன்னுடைய பெற்றோரைச் சந்திக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கிறார். தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு ஸ்ரேயாவின் திட்டம் வெற்றி பெற்றதா? அல்லது விமலின் சதி திட்டம் வென்றதா? என்பதே ‘சண்டக்காரி’ படத்தின் மீதிக்கதை.
மொத்தத்தில் ‘சண்டக்காரி’ — வெளிப்படைப் கோபம், ஆழமான அன்பு
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : விமல் , ஸ்ரேயா சரண் ,பிரபு,புன்னகை பூ கீதா,சத்யன் ,கே.ஆர். விஜயா,ரேகா,தேவ் கில்,வடிவேல் பாலாஜி
இயக்கம் : ஆர். மதேஷ்
இசை : அம்ரேஷ் கணேஷ்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
