2013-ஆம் ஆண்டு பின்னணியில், சென்னையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அபர்ணதி, தன் கணவனை இழந்து, மகன் அஸ்வினுடன் வசித்து வருகிறார். பள்ளி செல்லும் சிறுவனான அஸ்வினுக்கு செஸ் விளையாட்டின் மீது தீராத ஆர்வம். பள்ளிக்குச் செல்லாமல் செஸ் அகாடமி வெளியில் நின்றபடி வகுப்புகளை வேடிக்கை பார்க்கும் அஸ்வின், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் போல ஒரு ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆக வேண்டும் என்ற லட்சியக் கனவோடு இருக்கிறான்.
தாய்க்குத் தெரியாமல் உள்ளூர் செஸ் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்து சான்றிதழ் பெறுகிறான் அஸ்வின். ஆனால், செஸ் விளையாட்டின் மீது கடுமையான வெறுப்பில் இருக்கும் அபர்ணதி, அந்தச் சான்றிதழை கிழித்தெறிந்து இனி செஸ் விளையாடக் கூடாது எனக் கண்டிப்பு காட்டுகிறார். இதனால் ஆத்திரமடையும் அஸ்வின் வீட்டை விட்டு ஓடிவிடுகிறான்.
காவல்துறையின் உதவியோடு மகனைக் கண்டுபிடிக்கும் அபர்ணதி, செஸ் மீதான அவனது உண்மையான பேரார்வத்தைப் புரிந்து கொள்கிறார். அதன் பின், இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்லத் துடிக்கும் மகனுக்குத் தானே பயிற்சி அளிக்கத் தொடங்குகிறார். தாயின் திறமையான பயிற்சியால் அஸ்வின் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றானா? என்பதை அழுத்தமாகச் சொல்கிறது ‘தி கிராண்ட் மாஸ்டர்’.
மொத்தத்தில்: ‘தி கிராண்ட் மாஸ்டர்’ – தடைகளைத் தகர்த்த ‘ராஜா’ நகர்வு!
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள்: அபர்ணதி ,லிங்கேஷ் & அஸ்வின், சுரேஷ் மேனன், அன்பு, தமிழரசி, வெற்றி செழியன், மனோ மதுரை, விசித்திரன்
இயக்கம்: வெற்றி செழியன்
இசை: தினேஷ் ஆண்டனி
மக்கள் தொடர்பு :சதீஷ்
