மைலாஞ்சி காட்டில் மாந்தீரிகன் சுனிலும் வில்லன் துனியா விஜய்யும் சேர்ந்து ஒரு பயங்கரமான மாந்தீரிகச் சதியில் இறங்குகிறார்கள். அதே நேரத்தில், சென்னையில் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் சக்திக்கு பேய், குதிரை, மற்றும் காட்டில் இருக்கும் ஒரு பாழடைந்த அம்மன் கோவில் என அமானுஷ்யக் கனவுகள் வந்து பயமுறுத்துகின்றன. என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் சக்தி, ஊர்வசி மற்றும் யோகி பாபுவுடன் சேர்ந்து இந்த மர்மத்தின் பின்னணியைத் தேடத் தொடங்குகிறாள்.
இந்தத் தேடலின் போது, தன் கனவில் வந்த மர்மத்தை நேரில் கண்டறியும் ஆவலோடு சக்தி மயிலாஞ்சி கிராமத்திற்குப் பணியிட மாற்றம் வாங்கிக்கொண்டு செல்கிறாள். ஆனால் அங்கே சுற்றிலும் பாம்புகள் சூழ்ந்த காட்டில், வில்லன் கூட்டம் அவளைக் கொடூரமாகத் தாக்கிப் பழிவாங்க முயல்கிறது. சக்தி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழும் அந்த மரணப் போராட்டத்தில், அவளது பூர்வ ஜென்ம ரகசியமும், மூக்குத்தி அம்மனுக்கும் வில்லன் துனியா விஜய்க்கும் உள்ள அதிர்ச்சியூட்டும் தொடர்பும் ஒரு மிரட்டலான பிளாஷ்பேக்காக வெளிவருகிறது.
அதன்பின், வில்லன்கள் சக்தியைக் கொல்லத் துணியும் போது, அங்கே ஒரு பெரும் பிரபஞ்ச அதிர்வு ஏற்படுகிறது. ஹிப்ஹாப் தமிழாவின் அதிரடி பின்னணி இசை அதிர, தீய சக்திகளுக்கு சவால் விடும் வகையில் ஒரு மகா சக்தி அங்கே விழித்துக்கொள்கிறது. அதன் தொடர்ச்சியாக நடக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் இறுதிக்கட்டப் போரில், வில்லன்களின் மாந்தீரிகத் தந்திரங்கள் அனைத்தும் தவிடுபொடியாக்கப்பட்டனவா, சக்தி உயிர் பிழைத்தாளா, மற்றும் அந்தப் பாழடைந்த அம்மன் கோவிலின் பின்னணியில் ஒளிந்திருக்கும் உண்மையான மர்மம் என்ன என்பதே ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
மொத்தத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ – பூர்வ ஜென்மம்!
மதிப்பீடு : 4/5
நடிகர்கள்: நயன்தாரா, துனியா விஜய், ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு, மைனா நந்தினி,கருடா ராம், அபினயா, ஸ்ருதி.எஸ், சிங்கம்புலி, வி.ஆர்.சுவாமிநாதன், சிவகுமார்.எஸ், சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ.கருப்பையா, நிதின் சத்யா
இசை: ஹிப்ஹாப் தமிழா
இயக்கம்: சுந்தர்.சி
தணிக்கை சான்றிதழ்: U/A
மக்கள் தொடர்பு (PRO): சதீஷ் (AIM)
