ராம் என்டர்டெய்னர்ஸ் சார்பில்  எஸ்.வி.பிரகாஷ் தயாரிப்பில் ராஜீவ் கோவிந்த், அபிஷேக் ஜார்ஜ், யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன் ஹரிஷ் பெர்டி, அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’டெக்ஸ்டர்’

நாயகன் ராஜீவ் கோவிந்த், நாயகி யுக்தா பெர்வி இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்தில்  நாயகன் ராஜீவ் கோவிந்த் கண் முன்னே நாயகி யுக்தா பெர்வி மர்ம நபர் ஒருவரால் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்.

இதனையடுத்து காதலி நினைவாகவே இருக்கும் ராஜீவ் கோவிந்த் எந்நேரமும் குடித்து கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்ய அவரது மருத்துவ சகோதரால்  காப்பாற்றப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார்.

இந்நிலையில்  இருந்து ராஜீவை மீட்க நினைக்கும் அவரது சகோதரர் மருத்துவர்கள் உதவியுடன் அவர் காதலியை மறக்கும் விதமாக பழைய நினைவுகளை அழிக்கும்  சிகிச்சை ஒன்றைச் செய்கிறார்கள்.

இந்த சிகிச்சையின் விளைவாக தனது பள்ளித் தோழியான சித்தாரா விஜயனுடன் நட்பு ஏற்படுகிறது. மறுபக்கம் அபிஷேக் ஜார்ஜ்  சிறுவயதில் நடந்த  அவமானத்திற்கு  பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் திடீர் என சித்தாரா விஜயன் கடத்தப்படுகிறார்.

இறுதியில் சித்தாரா விஜயனை கடத்தியது யார்? என்பதை  ராஜீவ் கோவிந்த் கண்டுபிடித்தாரா ? இல்லையா? யுக்தா பெர்வினை கொலை செய்ய மர்ம நபரை நாயகன் பழி வாங்கினாரா? இல்லையா? என்பதே ’டெக்ஸ்டர்’  பாத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ராஜீவ் கோவிந்த், அதிரடி நாயகனாக நடித்திருக்கிறார். காதல்,ஆக்ஷன், ரொமான்ஸ் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகிகளாக நடித்திருக்கும் யுக்தா பெர்வி மற்றும்  சித்தாரா விஜயன் இருவருமே கொடுத்த வேலையை சரியாக செய்து அனைவரின் கவனத்தை பெறுகின்றனர். வித்யாசமான  கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார் அபிஷேக் ஜார்ஜ்

தாதாவாக வரும் ஹரிஷ் பெர்டி அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி,சினேகல், ஆதித்யன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஸ்ரீநாத் விஜய் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை படதத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் உள்ளது. ஆதித்ய கோவிந்தராஜின் ஒளிப்பதிவு அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் இருக்கிறது.

காதலியை கொலை செய்த கொலைகாரனை வழி வாங்குவதை மையமாக வைத்து இத்திரைப்டத்தை  உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சூரியன்.ஜி இத்திரைப்படத்தை காதல், ஆக்ஷன், சென்டிமென்ட ,சஸ்பென்ஸ்  கலந்து கொடுத்திருக்கிறார்.

நடிகர்கள் : ராஜீவ் கோவிந்த், அபிஷேக் ஜார்ஜ், யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன் ஹரிஷ் பெர்டி,
இசை :ஸ்ரீநாத் விஜய்
இயக்கம் : சூரியன்.ஜி
மக்கள் தொடர்பு : வெங்கட்

Leave a Reply

Your email address will not be published.