RTS Film Factory சார்பில் திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில் நட்டி சுப்ரமணியம், அருண் பாண்டியன், அக்ஷரா ரெட்டி, மூணார் ரமேஷ், வினோதினி வைத்தியநாதன், ஆதித்யா சிவகுமார், யுவினா பார்த்தவி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ரைட்’
கோவளம் போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் நட்டி, அமைச்சர் மகனின் நண்பர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார். இந்நிலையில் பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு பணிக்காக வெளியே சென்று விட அமைச்சர் மகன் தன்னுடைய ஆட்களை காவல் நிலையத்திலிருந்து அழைத்து செல்கிறான்.
இந்நிலையில் காவல் நிலையத்தில் இருக்கும் லேப்டாப் மூலம் தொடர்பு கொள்ளும் மர்ம நபர் ஒருவர் காவல் நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதோடு, காவல் நிலையம் மற்றும் அதனை சுற்றி வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், காவல் நிலையத்தில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அந்த வெடிகுண்டுகள் தானாகவே வெடிக்கும் என்றும் மிரட்டுகிறார்.
மறுபக்கம் அருண் பாண்டியன் தனது மகன் காணவில்லை என புகார் கொடுக்க வருகிறார். பெண் சப்-இன்ஸ்பெக்டர் அக்ஷரா ரெட்டி தனது திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக வர சில காவலர்கள், இரண்டு கைதிகள் காவல் நிலையத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இந்நிலையில் அதே காவல் நிலைய எழுத்தர் மூணார் ரமேஷ், உட்கார்ந்து இருக்கும் இருக்கையில் பாம் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது.
அங்கிருக்கும் அருண் பாண்டியன் அந்த பாமை செயலிழக்க செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார். இறுதியில் காவல் நிலையத்தில் பாம் வைத்தவர் யார் ? எதற்காக ? அருண்பாண்டியன் பாமை அகற்றினாரா? இல்லையா? காவல்நிலையத்தில் இருந்தவர்கள் உயிருடன் வெளியே வந்தார்களா ? இல்லையா? என்பதே ‘ரைட்’ படத்தின் மீதிக்கதை.
போலீஸ் இன்ஸ்பெக்டரான நட்டி நேர்மையான போலீஸ் அதிகாரியாக கம்பீரமாக வலம் வருகிறார். படத்தின் ஆரம்பத்தில் ஒரு சில காட்சிகளில் வருபவர் இறுதிக்காட்சியில் முழுப்படத்தையும் தங்கி நிற்கிறார். பாசமிகு அப்பாவாக அனைவரின் மனத்திலும் இடம் பிடிக்கிறார்.
முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அருபாண்டியன் தனது அனுபவ மூலம் அந்த கதாபத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். காவல் நிலையத்தில் மற்றவர்கள் உயிரை காப்பாற்றத்தான் எனக்கு தெரியும் என்று கூறும் இடத்தில் உள்ளத்தால் உயர்ந்து நிற்கிறார்
பெண் சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் அக்ஷரா ரெட்டி, கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் மூணார் ரவி, திபதியாக நடித்திருக்கும் வினோதினி, இளம் ஜோடியாக நடித்திருக்கும் ஆதித்யா சிவகுமார் மற்றும் யுவினா, கைதியாக நடித்திருக்கும் தங்கதுரை, பெண் காவலர் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.
இசையமைப்பாளர் குணா பாலசுப்பிரமணியனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. எம்.பத்மேஷ், ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்கிறது.
இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை குருவாலி யார் என்பதை யூகிக்க முடியாத விதத்தில் சஸ்பென்சாக கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்.
மொத்தத்தில் : ‘ரைட்’ – நேர்மையானவன்
மதிப்பீடு : 3.3/5
நடிகர்கள் : நட்டி சுப்ரமணியம், அருண் பாண்டியன், அக்ஷரா ரெட்டி, மூணார் ரமேஷ், வினோதினி வைத்தியநாதன்
இசை : குணா பாலசுப்பிரமணியன்
இயக்கம் : சுப்ரமணியன் ரமேஷ் குமார்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா 0AIM)
Leave a Reply