கோதண்டா & கோ, லட்சு கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் குரு இயக்கத்தில் சோனியா அகர்வால், குட்டி புலி சரவண சக்தி, திலீப்ஸ், வர்ஷிட்ட சுகண்யா. ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பருத்தி’.
தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பள்ளி மாணவன் திலீப்ஸ் தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறார். மேல்சாதி பிரிவை சேர்ந்த தலைவரின் மகள் வர்ஷிட்டா, திலீப்ஸ் இருவரும் ஒரே பள்ளியில் சேர்ந்து படிக்கிறார்கள். சிறுமி வர்ஷிட்டா சிறுவன் திலீப்ஸிடம் அன்புடனும் அக்கறையுடனும் பார்த்துக் கொள்கிறார்.
மறுபக்கம் கணவரை இழந்த சோனியா அகர்வால், ஊருக்கு வெளியே இருக்கும் தனது உறவினர் வீட்டில் வசிக்கிறார். விவசாய கூலி வேலை செய்து தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் சோனியா அகர்வால் தனது அம்மா என்ற உண்ணாமை திலீப்சுக்கு தெரிய வருகிறது.
இறுதியில் திலீப்ஸ் அம்மா சோனியாவுடன் ஒன்று சேந்தாரா ? இல்லையா? சோனியா மகனை பிரிய காரணம் என்ன? என்பதே ‘பருத்தி’ படத்தின் மீதிக்கதை.
அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சோனியா அகர்வால் கிராமத்து பெண்ணாக கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் சிறுவன் திலிப்ஸ் அம்மா பாசத்திற்கு ஏங்குபவராக இயல்பான நடிப்பபை கொடுத்திருக்கிறார். படத்தின் இறுதிக்காட்சியில் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வர வைத்து விடுகிறார்
சிறுமி வர்ஷிட்ட, சுகண்யா, சிறுமியின் அப்பாவாக நடித்திருகிப்பவர் ,குட்டிப்புலி சரவணன் என படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ரஞ்சித் வாசுதேவன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலமாக உள்ளது. ராஜேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது.
அம்மா – மகன் உறவை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் ஏ.குரு இத்திரைப்படத்தில் சிறுவர்கள் நட்பு, சமூகத்தில் நிலவும் சாதி பாகுபாடு , ஏற்றது தாழ்வு என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘பருத்தி’ – அன்புக்காக
மதிப்பீடு : 2/5
நடிகர்கள் : சோனியா அகர்வால், குட்டி புலி சரவண சக்தி, திலீப்ஸ், வர்ஷிட்ட சுகண்யா
இசை : ரஞ்சித் வாசுதேவன்
இஐக்கம் : ஏ.குரு
மக்கள் தொடர்பு : நிதீஷ் – புவன்