எம்டி பிக்சர்ஸ் வழங்கும் , துரை மகாதேவன் தயாரிப்பில், இயக்குநர் அருண் பிரசாத் இயக்கத்தில் ஆனந்த் நாக், ஜனனி, பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கௌரி சங்கர், சரத் ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’அறிவான்’
நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் ஆனந்த் நாக் நெய்வேலியில் இருக்கும் காவல் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுகிறார். வேலைக்கு சேர்ந்த இரண்டு நாட்களில் சாலையில் ஒருவர் இறந்து கிடக்கிறார். இறந்தவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தா ? என்று விசாரணை மேற்கொள்ளகிறார்.
மறுநாள் அதே பகுதியில் காரில் வந்த நபர் கழுத்து அறுபட்ட நிலையில் சடலம் கிடக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் காருக்கும் தொடர்பு இருப்பதை அறியும் ஆனந்த் நாக், விசாரணையை தீவிரப்படுத்த இந்த இரண்டு சம்பவங்களில் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவருக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார்.
அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்துகிறார். அவர் கொலையாளி பற்றிய தகவலை சொல்ல முயற்சிக்கும் போது, காவல் நிலையத்தில் வைத்தே கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.
காவல் நிலையத்திலேயே பெண் கொலை நடந்ததால் ஆனந்த் நாக்கிற்கு பணி அழுத்தம் அதிமுகமாகிறது. இந்நிலையில் உறவுக்கார பெண்ணும் குற்றவியல் நிருபரான நாயகி ஜனனி உதவியுடன் தனது விசாரணையை மேற்கொள்ள அதில் குற்றவாளி குறித்து முக்கியமான ஆதாரம் நாயகி ஜனனிக்கு கிடைக்கிறது.
இதனையடுத்து ஜனனிக்கு கொலைகாரனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இறுதியில் நாயகன் ஆனந்த் நாக் குற்றவாளி யார் ? என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? நாயகி ஜனனியை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ’அறிவான்’ படத்தின் மீதிக்கதை.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் ஆனந்த் நாக் பொருத்தமான தேர்வாக இருக்கிறார். விசாரிக்கும் முறை, காதல், சண்டை என அனைத்திலும் சிறப்பான நடிப்பபை கொடுத்திருக்கிறார்.
நிருபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி நடித்திருக்கும் ஜனனி அந்த கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்றுதான் கூற வேண்டும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
இத்திரைப்படத்தில் பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கெளரி சங்கர், குருமூர்த்தி என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கார்த்திக்.ஈ.ஆர்.ஏ இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதை நகர்விற்கு துணை நிற்கிறது. யஷ்வந்த் பாலாஜியின் ஒளிப்பதிவு சூஸ்பிங்க் திரில்லர் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதையை உருவாக்கி இருக்கும் இயக்குநர் அருண் பிரசாத் இத்திரைப்படத்தில் தொடர் கொலை , பெற்ற அப்பாவால் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் கொடுமைகளை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை கதையை யாரும் யூகிக்க முடியாத வகையில் படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’அறிவான்’ – எச்சரிக்கை
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : ஆனந்த் நாக், ஜனனி, பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ்,
இசை : கார்த்திக்
இயக்கம் : அருண் பிரசாத்
மக்கள் தொடர்பு : A.ராஜா