தேவிபிரசாத் ஷெட்டி & சாத்விக் ஹெப்பார் தயாரிப்பில் இயக்குநர் தேவிபிரசாத் ஷெட்டி இயக்கத்தில் விஜய ராகவேந்திரா, கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, உஷா பண்டாரி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் செகண்ட் கேஸ் ஆப் ‘சீதாராம்’
ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள இடத்தில் முள் கம்பிகளால் கை கால்கள் கட்டப்பட்டு மர்மமான முறையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சடலம் கிடக்கிறது. மேலும் இதே போல தொடர் கொலைகள் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த தொடர் கொலை காரணமாக நகரில் இருக்கும் முக்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்படுகிறது
இதனையடுத்து இவ்வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாயகன் விஜய ராகவேந்திரா விசாரணை மேற்கொள்கிறார். இந்நிலையில் காவல் நிலையத்திற்கு வரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மகளுக்கு வாலிபர் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக கூறி அந்த நபரின் புகைப்படத்தை கொடுத்து விட்டு செல்கிறார்.
அந்த வாலிபர் குறித்து விசாரிக்கையில் மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போனவர் என்பது தெரிய வருகிறது அது மட்டுமில்லாமல் வழக்கு கொடுத்த நபரின் மகள் மூன்று மாதத்திற்கு முன்பே தற்கொலை செய்து கொண்ட பெண் என்று தெரிவதோடு இன்ஸ்பெக்டர் துப்பாக்கியும் காணாமல் போகிறது.
இதனையடுத்து ஆசிரியர் வீட்டிற்கு செல்லும் இன்ஸ்பெக்டர் விஜயராகவேந்திராவை பள்ளி ஆசிரியர் துப்பாக்கியால் சுட்டுகிறார். தொடர் கொலைக்கு அந்த ஆசிரியர்தான் காரணம் என்று அவரை சிறையில் அடைக்கிறார்கள்.
ஆனால் மீண்டும் அதே போல கொலைகள் நடக்கின்றன, ஒரு கட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய ராகவேந்திராவின் அக்கா கணவரை கடத்தி கொலை செய்ய முயற்சி செய்கிறார் அந்த மர்ம மனிதர்.
இறுதியில் நாயகன் விஜய ராகவேந்திரா அக்கா கணவரை காப்பாற்றினாரா? இல்லையா? தொடர் கொலைகளை செய்யும் மர்ம மனிதன் யார் ? என்பதே கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே செகண்ட் கேஸ் ஆப் ‘சீதாராம்’ படத்தின் மீதிக்கதை.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் நாயகன் விஜய ராகவேந்திரா கதைக்கு ஏற்ற பொருத்தமான தேர்வாக இருக்கிறார். கொலைகாரனை பிடிக்க காட்டும் தீவிரம், அக்கா பாசம், அதிரடி சண்டை என அனைத்திலும் தன் திறமையை நிரூபித்துக்காட்டியிருக்கிறார்.
சீதாராமன் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உஷா பண்டாரி , செபஸ்டியன் கதாபாத்திரத்தில் வரும் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே என மற்ற வேடங்ககளில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் நவனீத் ஷாம் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை சஸ்பென்க் திரில்லர் படத்திற்கு ஏற்றவாறு உள்ளது. ஹேமந்த் ஒளிப்பதிவு கதை நகர்விற்கு துணை நிற்கிறது.
தொடர் கொலைகளை மைய கருவாக வைத்து திரைப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கும் இயக்குநர் தேவிபிரசாத் ஷெட்டி இத்திரைப்டத்தில் முதல்பாதி தொடர் கொலைகள், விசாரணை என்று கதை நகர இரண்டாம்பாதி காதல், மர்மம் என்று சுவாரஸ்யமாக கதையை நகர்த்தி சென்றிருக்கிறார். இத்திப்படத்தின் கதையை யாரும் யூகிக்க முடியாத வகையில் கொண்டு சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் செகண்ட் கேஸ் ஆப் ‘சீதாராம்’ – தொடர் மர்மம்
மதிப்பீடு : 3.3/5
நடிகர்கள் : விஜய ராகவேந்திரா, கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, உஷா பண்டாரி
இசை : நவனீத் ஷாம்
இயக்கம் : தேவிபிரசாத் ஷெட்டி
மக்கள் தொடர்பு : ஸ்ரீ வெங்கடேஷ்