கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’, லோகேஷ் கனகராஜின் ‘ஜி-ஸ்குவாட்’ ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் விது ,பிரீத்தி அஸ்ரானி,மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ் பிரேம்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’29’
சேலத்தில் குடும்பத்துடன் வசிக்கும் நாயகன் விதுவிற்கு 29 வயதியாகியும் தான் யார்? எனற அடையாளத்தை தேடி வருகிறார். வேலைக்காக சென்னை வர .நாயகன் வேலை பார்க்கும் அதே நிறுவனத்திலேயே நாயகி ப்ரீத்தியும் வேலைக்கு சேருகிறார். இருவரும் நட்பாக பழக நாளடைவில் அது காதலாக மலர்கிறது.
இந்நிலையில் நாயகி பிரீத்தியின் காதலன் என்பதுதான் தன் அடையாளம் என்று வாழ்ந்து வருபவர் நாயகன் விது ,ஆனால் நாயகி பிரீத்திற்கு சிறுவதில் இருந்து கலெக்டருக்கு படிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்து வருகிறார். இதனால் இருவருக்கிடையே பிரிவு ஏற்படுகிறது.
இந்நிலையில் கலெக்டர் தேர்வு சரியாக எழுத முடியாததால் நாயகி ப்ரீத்தி ஊரை விட்டு டெல்லி சென்று விடுகிறார். காதல் தோல்வியால் சொந்த ஊருக்கு செல்லும் நாயகன் விது அங்கு கால்வாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கல்லூரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுகிறார்.
இதனால் சிறைக்கு செல்லும் நாயகன் விதுவை சிறையில் வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். இறுதியில் நாயகன் விது சிறையில் இருந்து உயிருடன் வெளியே வந்தாரா? இல்லையா? தனது அடையாளத்தை உலகறிய செய்தாரா? இல்லையா? விது – ப்ரீத்தி இருவரின் காதல் கை கூடியதா ? இல்லையா? என்பதே ’29’ படத்தின் மீதிக்கதை.
சத்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விது, துடிப்பு மிக்க இளைஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல், அம்மா பாசம், சமூக அக்கறை என அனைத்தையும் அழகாக உள்வாங்கி ஒரு உணர்வுபூர்வமான நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார். இது போல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தால் தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு தனி இடம் நிச்சயம் இருக்கும்.
விஜி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி பிரீத்தி அஸ்ரானி,
அழகாக இருப்பதோடு அளவான நடிப்பால் கவர்கிறார். காதல் மற்றும் லட்சியம் இரண்டுக்கும் நடுவே மாட்டிக்கொண்டு படும்பாட்டை தன் உணர்வுகளால் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். நாயகனின் நண்பராக நடித்திருக்கும் அவினாஸ், காதல் தோல்வியில் புலம்புவது ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஆதிரா பாண்டியலக்ஷ்மி, நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் சிந்து ஷியாம், நாயகியின் அப்பாவாக வரும் பிரேம்குமார் என படத்தில் மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை, பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்,
காதலை மட்டும் சொல்லாமல் காதலர்களுக்கான அடையாளம் வேண்டும் என்ற மைய கருத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார் இத்திரைப்படத்தில் காதலை மட்டும் சொல்லாமல், லட்சியம் , அம்மா பாசம், சமூக அக்கறை என அனைத்தையும் கலந்து அனைவரும் ரசிக்கும் விதத்தில் படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’29’ – உணர்வு பூர்வமான காதல்
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : விது ,பிரீத்தி அஸ்ரானி,மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ் பிரேம்குமார்
இசை : ஷான் ரோல்டன்
இயக்கம் : ரத்ன குமார்
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (S 2 Media)
