Asia Iconic Studios சார்பில் ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன் மற்றும் வினோத் கண்ணன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில் அபிநயா, அனுமிதா, அனுஷிதா, சுப்ரமணிய சிவா, சங்கீதா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் “இரட்டையர்”.
நாயகி அபிநயா . கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் மலைப்பாதையில் காரில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்தில் கணவனை பறிகொடுக்கிறார். முகத்தில் பலத்த காயங்களையோடு மருத்துவமனையில் சேர்க்கபப்டுகிறார்.
இதனையடுத்து பிளாஸ்டிக் சர்ஜரிக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பும் அபிநயா குழந்தைகளிடம் கடுமையாக நடந்துக் கொள்கிறார். இதனால் சந்தேகம் அடையும் இரண்டு குழந்தைகளும் வீட்டிற்கு வந்திருப்பது யார் ? என்பதை தெரிந்துக் கொள்ள முயற்சி மேற்கொள்கிறார்கள்.
இந்நிலையில் வீட்டில் இருந்து ஒரு பெண் குழந்தை மட்டும் வெளியே சென்று போலீசில் புகார் கொடுக்க நினைக்கிறது. இறுதியில் தப்பிச் சென்ற பெண் குழந்தை போலீசில் புகார் கொடுத்ததா ? இல்லையா ? வீட்டிற்கு வந்திருக்கும் அபிநயா யார் ? என்பதே “இரட்டையர்” படத்தின் மீதிக்கதை.
இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கும் அபிநயா இயல்பான நடிப்பால் கவர்கிறார். கணவனின் இழப்பு , சொந்த குழந்தைகளே தன்னை அம்மாவாக ஏற்றுக்கொள்ளாததை நினைத்து ஏங்குவது , வீட்டை மீட்க எடுக்கும் முயற்சி என ஒவ்வொரு உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
சிறுமிகள் அனுமிதா மற்றும் அனுஷிதா இருவரும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். வீட்டிற்கு வந்திருக்கும் அபிநயா உண்மையான அம்மாவா என்று தெரிந்து கொள்வதற்காக சிறுமிகள் எடுக்கும் முயற்சிகள் ஒரு பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. உணர்வுகளை வெளிப்படுத்தி கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.
புரியாத புதியதாக இருக்கும் சுப்ரமணிய சிவா கதாபாத்திரம் கதை நகர்விற்கும் திருப்புமுனை காட்சிகள் அமைவதற்கும் துணை நிற்கிறது. சங்கீதா என படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜிகேவியின் பின்னணி இசை கதை விறுவிறுப்பாக கொண்டு செல்ல துணை நிற்கிறார். முகமது அமீன் ஒளிப்பதிவு காட்சிகள் விறுவிறுப்பாக நகர்விற்கு துணை நிற்கிறது.
அம்மாவுக்கும் இரட்டை பெண் குழந்தைகளுக்கும் இடையே நடக்கும் பாசம் மற்றும் உணர்வுகளை மையப்படுத்தி ஒரு உணர்வு பூர்வமான திரைக்கதையை உருவாகியிருக்கும் அறிமுக இயக்குநர் ஜெகதீஷ். தமிழ் சினிமாவில் இதுவரை வந்த திரில்லர் படங்களிலிருந்து மாறுபட்டு, வித்தியாசமான கதைக்களம், அச்சமூட்டும் காட்சிகள் மற்றும் பரபரப்பான திரைக்கதை என படத்தில் குறைவான கதாபாத்திரங்களை மட்டும் வைத்து கொண்டு ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கதையை கொண்டு சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் “இரட்டையர்” – பாச போராட்டம்
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : அபிநயா, அனுமிதா, அனுஷிதா, சுப்ரமணிய சிவா, சங்கீதா
இசை : ஜிகேவி
இயக்கம் : ஜெகதீஷ்
மக்கள் தொடர்பு : மணி மதன்
