இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் நம்பகமான நகை பிராண்டுகளில் ஒன்றான கல்யாண் ஜூவல்லர்ஸ் சென்னையின் அசோக் நகர், அண்ணா மெயின் ரோடு (அசோக் பில்லர் ரோடு) (Ashok Pillar Road, Anna Main Road, Ashok Nagar) என்ற முகவரியில் தனது புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இந்த புதிய விற்பனை நிலையம் வருகிற ஜூலை 12 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்குத் திரைப்பட நட்சத்திரங்கள் திரு. பிரபு கணேசன் மற்றும் செல்வி. மாளவிகா மோகனன் ஆகியோரால் திறந்து வைக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டின் முக்கியச் சந்தைகளில் ஏற்கனவே வலுவான விற்பனை செயல்பாடுகளைக் கொண்டுள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு, இந்த புதிய விற்பனை நிலையம் தமிழ்நாட்டின் 13-வது விற்பனை நிலையமாகும். உலகத்தரம் வாய்ந்த சூழலில் ஏராளமான ஆபரண வடிவமைப்புகளை வழங்கவுள்ள இந்த புதிய விற்பனை நிலையம், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அனுபவத்தை மேலும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றும்.
சென்னை அசோக் நகரில் அமைந்திருக்கும் இந்த புதிய விற்பனை நிலையம் தொடக்கம் குறித்து கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ரமேஷ் கல்யாணராமன் (Mr. Ramesh Kalyanaraman, Executive Director, Kalyan Jewellers) பேசுகையில், “ஒரு நிறுவனமாக, வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அனுபவத்தின் ஒவ்வொரு ஆபரண பகுதியையும் மேம்படுத்தும் ஒரு முழுமையான கட்டமைப்பை உருவாக்குவதில் நாங்கள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம். தமிழ்நாடு எப்போதும் எங்களது மிக முக்கியமான சந்தைகளில் ஒன்றாக விளங்கி வருகிறது; கடந்த பல ஆண்டுகளாக எங்களது விற்பனை செயல்பாடுகளை இங்கு நாங்கள் வியாபார உத்தி அடிப்படையில் விரிவுபடுத்தி வருகிறோம். சென்னை அசோக் நகரில் அமையவுள்ள இந்த புதிய விற்பனை நிலையம் இப்பகுதியில் எங்களது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும், எங்களது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் செளகரியத்தையும், உலகத்தரம் வாய்ந்த தனித்துவமான நகைகளை எளிதில் வாங்கும் வாய்ப்பையும், ஒவ்வொரு நகைக்கும் சிறந்த மதிப்பையும் வழங்கும்” என்றார்.
இந்த புதிய விற்பனை நிலையத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்த விற்பனை நிலையத்தில் பல பிரத்தியேகச் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, நகைகளின் செய்கூலி/சேதாரத்தின் மீது 30% அதிரடித் தள்ளுபடி* (30% off on Value addition*) வழங்கப்படுகிறது. அத்தோடு, சந்தையிலேயே மிகக் குறைந்ததும், அனைத்து விற்பனை நிலையங்களிலும் ஒரே மாதிரியானதுமான கல்யாண் நிறுவனத்தின் ‘சிறப்பு தங்கப் பலகை விலை’ (Special Gold Board Rate) பலனையும் வாடிக்கையாளர்கள் பெற்று மகிழலாம். இந்தத் தொடக்கக் காலச் சலுகைகள் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
கல்யாண் ஜூவல்லர்ஸின் ஒவ்வொரு நகையும் BIS ஹால்மார்க் முத்திரை பெற்றதுடன், பலகட்ட தூய்மைப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு தங்கத்தின் தூய்மைக்கான உத்தரவாதம், வாழ்நாள் முழுவதற்குமான இலவசப் பராமரிப்பு, துல்லியமான தயாரிப்பு விபரங்கள் மற்றும் வெளிப்படையான எக்ஸ்சேஞ்ச் & பை-பேக் (Buy-back) கொள்கைகளை உறுதி செய்யும் நிறுவனத்தின் பிரத்தியேக ‘4-அடுக்கு உத்தரவாதச் சான்றிதழ்’ (4-Level Assurance Certificate) வழங்கப்படும். இந்த அசைக்க முடியாத உத்தரவாதம், வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரம் மற்றும் நம்பிக்கையை வழங்குவதில் கல்யாண் ஜூவல்லர்ஸ் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
இந்த புதிய விற்பனை நிலையத்தில் கல்யாண் நிறுவனத்தின் புகழ்பெற்ற பிராண்டுகளான முகூர்த் (Muhurat – திருமண நகை வரிசை), முத்ரா (Mudhra – பாரம்பரிய கைவினை நகைகள்), நிமா (Nimah – கோவில் நகைகள்), க்ளோ (Glo – அசைந்து ஒளிரும் வைரங்கள்), ஜியா (Ziah – சாலிடேர் போன்ற வைர நகைகள்), அனோகி (Anokhi – வெட்டப்படாத அன்-கட் வைரங்கள்), அபூர்வா (Apoorva – விசேஷக் கொண்டாட்டங்களுக்கான வைரங்கள்), அந்தரா (Antara – திருமண வைர நகைகள்), ஹீரா (Hera – அன்றாட பயன்பாட்டு வைர நகைகள்), ரங் (Rang – நவரத்தின நகைகள்) மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட லிலா (Lila – வண்ணக் கற்கள் மற்றும் வைர நகைகள்) ஆகிய அனைத்து நகைத் தொகுப்புகளும் வாடிக்கையாளர்கள் வாங்கி மகிழ்வதற்காக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
நிபந்தனைகளுக்கு உட்பட்டது. (T&C Apply)
கூடுதல் தகவல்களுக்கு இணையத்தில் பார்க்க https://www.kalyanjewellers.net/
கல்யாண் ஜூவல்லர்ஸ் (Kalyan Jewellers) பற்றி:
கேரள மாநிலம் திருச்சூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது கல்யாண் ஜூவல்லர்ஸ். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவிலும் தனது விற்பனை நிலையங்களின் மூலம் வலுவான செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய நகை சில்லறை வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய சந்தையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட காலப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம் தரம், வெளிப்படைத்தன்மை, விலை நிர்ணயம் மற்றும் புத்தாக்க உத்திகளில் இத்துறைக்கான புதிய மைல்கற்களை உருவாக்கியுள்ளது.
கல்யாண் ஜூவல்லர்ஸ் வாடிக்கையாளர்களின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தங்கம், வைரம் மற்றும் நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாரம்பரிய மற்றும் சமகால ஆபரண வடிவமைப்புகளின் ஏராளமான ஆபரணங்களை வழங்குகிறது. தற்போது கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), குவைத், கத்தார், ஓமன், அமெரிக்கா (USA) மற்றும் இங்கிலாந்து (UK) முழுவதும் 9,08,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் 400-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட விற்பனை நிலையங்களுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. q
