ஸ்ரீசக்ராஸ் என்டர்டெயின்மென்ட்ஸ், A+S மூவிஸ், பெட்டர் இன்வெஸ்ட் மீடியா விஷன் ஃபண்ட், மஹாயானா மோஷன் பிக்சர்ஸ் சார்பில் சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, அனுராக் ரெட்டி, சரத் சந்திரா, ஈஷ்வரன் விஜயராகவன் தயாரிப்பில் இயக்குநர் வெங்கடேஷ் மஹா இயக்கத்தில் சத்ய தேவ், விகாஸ் முப்பாலா , தீபா தாமஸ் , பால பராசர் , ஆனந்த் பாரதி , பிரணய் வக , மாஸ்டர் கிரண் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ராவ் பகதூர்’ .
1968 முதல் 1991 வரையிலான காலகட்டத்தில் அரண்மனையில் நடக்கும் சம்பவங்களை கதையை மைய கருவாக வைத்து உருவாக்கபப்ட்டிருக்கும் திரைப்படம் ‘ராவ் பகதூர்’.
அரச குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் புவனம் ராமப்பா ராவ் பகதூர் (சத்யதேவ்), கல்லீரல் புற்றுநோய் மற்றும் மனநலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு தனது இறுதி நாட்களை கழித்து வருகிறார். எதிர்பாராத ஒரு விபத்தில் அவரது இரண்டாவது மகன் குசுமப்பாவின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி ரேணுகா ( தீபா தாமஸ் ) கடந்த 8 ஆண்டுகளாக ஒரு அறைக்குள் தன்னைத் தானே சிறை வைத்துக் கொள்கிறார்.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஆனந்த் வேறொரு நபரை அரண்மனைக்கு அழைத்து வந்து இவர்தான் குசுமப்பாவின் தந்தை என்று கூற இதை கேட்டு அதிர்ச்சி அடையும் நாயகன் ராவ் பகதூர் (சத்யதேவ்) இறந்தது தன்னுடைய மகன்தான் என்று சில ஆதரங்களை கொடுக்க இந்த வழக்கு நீதிமன்றம் செல்கிறது.
இறுதியில் ராவ் பகதூர் (சத்யதேவ்) குசுமப்பா தன்னுடைய மகன்தான் என்று நீதிமன்றத்தில் நிரூபித்தாரா ? இல்லையா ? கடந்த 8 ஆண்டுகளாக வீட்டில் தனி அறையில் இருக்கும் ரேணுகா ( தீபா தாமஸ் ) வெளியே வந்தாரா ? இல்லையா ? என்பதே ‘ராவ் பகதூர்’ படத்தின் மீதிக்கதை.
ராமப்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யதேவ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பல்வேறு காலகட்டத்திற்கு ஏற்றவாறு வயது, தோற்றம், கோபம், அழுகை என அனைத்து உணர்வுகளையும் உள்வாங்கி உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒட்டுமொத்தப் முழுப் படத்தையும் தனது தோள்களில் சுமந்து நிற்கிறார்.
சத்யதேவ் மனைவியாக நடித்திருக்கும் தீபா தாமஸ் (ரேணுகாவாக) துணிச்சல் மிக்க கதாபாத்திரத்தில் கவனத்தை ஈர்க்கிறார் . படத்தின் இறுதிக்காட்சியில் யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு ட்விஸ்ட் கொடுக்கிறார்.
டாக்டர் ஆச்சாரியாக நடித்திருக்கும் விகாஸ் முப்பாலா , வீட்டு வேலை செய்பவராக நடித்திருக்கும் பாலா பராசர், இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் ஆனந்த், மூத்த மகனாக நடித்திருக்கும் பிரணய் வக , இளைய மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் கிரண் என படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் வரும் அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஸ்மரன் சாய் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. கார்த்திக் பர்மார் ஒளிப்பதிவு அழகாவும் பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
அரண்மனையில் நடக்கும் சம்பவங்களை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாகியிருக்கும் இயக்குநர் வெங்கடேஷ் மஹா, இத்திரைப்படத்தில் சமூகத்தில் ஊறிப்போயுள்ள நிறவெறி மற்றும் வர்க்கப் பாகுபாடுகளை பற்றி பேசியிருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், ராவ் பகதூர் ஒரு துணிச்சலான, நேர்மையான கலைப் படைப்பு. இருப்பினும், படத்தின் அதிகப்படியான நீளம் மற்றும் முதல் பாதி மிக மெதுவாக நகர்வது படத்தின் மிகப்பெரிய குறையாக உள்ளது.
மொத்தத்தில் ‘ராவ் பகதூர்’ – பிரமாண்ட படைப்பு
மதிப்பீடு : 4/5
நடிகர்கள் : சத்ய தேவ், விகாஸ் முப்பாலா , தீபா தாமஸ் , பால பராசர் , ஆனந்த் பாரதி
இசை : ஸ்மரன் சாய்
இயக்கம் : வெங்கடேஷ் மஹா
மக்கள் தொடர்பு : சதிஷ் குமார் (S 2 Media)
