குன்றம் புரடக்ஷன்ஸ் கே கே டி தயாரிப்பில் அருண் கே.பிரசாத் இயக்கத்தில் எம் எஸ் பாஸ்கர், கபாலி விஸ்வாந்த், வெண்பா, நமோ நாராயணன், ஆகாஷ் பிரேம் குமார், ப்ரியதர்ஷினி அருணாச்சலம், அன்னராஜ் கார்த்திகேயன் ஆகியோர் நடிப்பில் வேளுராகி இருக்கும் ’அக்கரன்’
எம் எஸ் பாஸ்கருக்கு இரண்டு மகள்கள் மூத்த மகள் வெண்பாவிற்கும் கபாலி விஸ்வந்துடன் திருமணப் பேச்சு வார்த்தை நடந்து சில காரணங்களால் திருமணம் நடைபெறாமல் இருக்கிறது. இவரது இரண்டாவது மகள் ப்ரியதர்ஷினி மருத்துவ படிப்பு படித்துக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், நீட் தேர்விற்காக படிக்கச் சென்ற தனியார் பயிற்சி மையத்தில் ,பாஸ் ஆக வேண்டும் என்றால் பத்து லட்சம் கேட்பதாக தனது அக்கா வெண்பாவிடம் போனில் கூறுகிறார் ப்ரியதர்ஷினி. அன்று மாலை முதல் ப்ரியதர்ஷினி வீட்டிற்கு வரவில்லை. தனது மகளை காணவில்லை என்று போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்கிறார் எம் எஸ் பாஸ்கர்.
மறுபக்கம் விஸ்வந்தும் தேடுகிறார். இறுதியில் காணாமல் போன மகளை எம் எஸ் பாஸ்கர் கண்டுபித்தாரா? இல்லையா? என்பதே ’அக்கரன்’ படத்தின் மீதிக்கதை.
படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம் எஸ் பாஸ்கர், தந்து அனுபவ நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். அமைதியாக வந்து அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக படத்தின் இறுதிக்காட்சியில் மிரட்டுகிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் கபாலி விஸ்வாந்த் எதார்த்த நாயகனாக படம் முழுவதும் வளம் வருகிறார். காதல்,பாசம்,எமோஷனல் , ஆக்ஷன் என அனைத்திலும் அசத்தியிருக்கிறார். படத்தின் இறுதிக்காட்சியில் இயல்பான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் வெண்பா அழகாக வந்து அளவான நடிப்பை நடிப்பை கொடுத்திருக்கிறார் தங்கையாக நடித்திருக்கும் ப்ரியதர்ஷினி படத்த்தின் கதை நகர்விற்கு துணை நிற்கிறார் . அமைச்சராக வரும் நமோ நாராயணன் வில்லன்களாக வரும் ஆகாஷ் பிரேம்குமார் , கார்த்திக் சந்திரசேகர் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஹரி இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை சத்தம் அதிகாக இருக்கிறது. ஆனந்த் ஒளிப்பதிவு கதை நகர்விற்கு துணை நிற்கிறது.
ஒரு நல்ல கதையை கையில் எடுத்து அதை வித்யாசமான முறையில் திரைக்கதை அமைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் அருண் கே.பிரசாத் அப்பா – மக்களுக்கான பாசத்தை ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’அக்கரன்’ பாசக்காரன்
மதிப்பீடு 3/ 5
நடிகர்கள் : எம் எஸ் பாஸ்கர், கபாலி விஸ்வாந்த், வெண்பா, நமோ நாராயணன், ஆகாஷ் பிரேம் குமார், ப்ரியதர்ஷினி
இசை : ஹரி
இயக்கம் : அருண் கே.பிரசாத்
மக்கள் தொடர்பு : சதிஷ் – சிவா
Leave a Reply