ஒரு நடிகர் தான் நடித்த இரண்டே படங்களின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பிடிப்பது அரிதான விஷயம். அந்த அரிதான விஷயத்தை செய்துள்ளவர் தான் நடிகர் வெற்றி.

இவர் ஹீரோவாக நடித்த எட்டு தோட்டாக்கள், ஜீவி ஆகிய இரண்டு படங்களும் அவருடைய சிறப்பான நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றது.

இந்நிலையில் வனம், கேர் ஆஃப் காதல், மெமரிஸ் போன்ற அவருடைய அடுத்த படங்கள் முந்தைய இரண்டு படங்களைப் போலவே வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ந்து நல்ல நல்ல கதைக்களம் உள்ள படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார் நடிகர் வெற்றி.

Leave a Reply

Your email address will not be published.