மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களும் கே ஆர் விஜயா அவர்களும் ஜோடியாக நடிக்க, இவர்களுடன் விகே ராமசாமி, நாகேஷ், மனோரம்மா, விஜயகுமாரி, எம் என் நம்பியார், சின்னப்ப தேவர், மேஜர் சுந்தர்ராஜன், எஸ். ஏ. அசோகன், எஸ். என். லட்சுமி ஆகியோர் நடித்து 1967 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “விவசாயி” அதில் எம்ஜிஆர் பாடிய “கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி” என்ற பாடலில் “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்” என்று புரட்சிக் கருத்தாக பாடியிருப்பார். இன்றும் வெளிநாட்டு மோகம் தான் உள்ளது.

உணவு வழங்கும் மண்ணின் மைந்தர்களான விவசாயிகளை பற்றிய கருத்துகளை எம்.ஜி.ஆருக்கு பிறகு திரையில் வேறுயாரும் அக்கறையாக காட்டியதில்லை. அந்தக் குறையைப் போக்க உருவாகியுள்ள படம்தான் “உழைக்கும் கைகள்”

இந்தியா முழுவதும் விவசாயிகள் பிரச்சனை தலைப்புச் செய்தியாக வந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் விவசாயிகளை பற்றிய ஒரு படம் உருவாகி உள்ளது. கே. எம்பையர் மூவிஸ் என்ற நிறுவனம் சார்பில் டாக்டர் கே. சூர்யா “உழைக்கும் கைகள்” என்ற பெயரில் அதை தயாரித்துள்ளார்.

இதில் நாமக்கல் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க, கிரண்மயி ஜோடியாக நடித்துள்ளார். இயக்குனர் செந்தில்நாதன், ஜாக்குவார் தங்கம், போண்டாமணி, டாக்டர் ஷர்மிளா, மோகன், விஜயலட்சுமி தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் சங்க தலைவர் பிரேம்நாத், குணா இன்னும் பலர் நடித்துள்ளனர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களுக்கு இசையமைத்து முத்தான, காலத்தால் அழியா பாடல்களை தந்த இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் “உழைக்கும் கைகள்” படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களால் திரை உலகில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜாக்குவார் தங்கம், நாமக்கல் எம்ஜிஆர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு சண்டைப்பயிற்சியளித்துள்ளார்.

நாமக்கல் எம்ஜிஆர் நடிக்கும் “உழைக்கும் கைகள்”

Leave a Reply

Your email address will not be published.