இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ஹிருத்திக் ரோஷன், அபிஷேக் பச்சன், விஜய்சேதுபதி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் இந்திய திரை உலகில் முன்னணி படைப்பாளியாக வலம் வரும் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் ஜூன் 17ஆம் தேதியன்று அமேசான் பிரைமில் வெளியாகும் முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடரின் முன்னோட்டத்தை கண்டு ரசித்து, வியந்து தங்களின் வாழ்த்துகளை  ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் அமேசான் ஒரிஜினல் தொடரான ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ மூலம் இந்தியா முழுவதும் உள்ள திரையுலகில் சகோதரத்துவத்தை வளர்த்தெடுத்து கவனத்தை ஈர்த்திருக்கிறது.

‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரின் முன்னோட்டம் வெளியாகி, பார்வையாளர்களை மட்டுமல்லாமல் திரையுலகினரை கவர்ந்து, பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஸ்ட்ரிமிங் செய்யப்படவிருக்கிறது. கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற விழாவில் இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டதிலிருந்து இந்திய திரையுலகில் மட்டுமல்லாமல் திரும்பும் திசையெங்கும் இது பேசுபொருளாக மாற்றம் பெற்றிருக்கிறது.

அபுதாபியில் பாலிவுட் நட்சத்திர நடிகர் அபிஷேக்பச்சன் இதனை உலகுக்கு அறிமுகப்படுத்திய பிறகு, ‘சுழல் = தி வோர்டெக்ஸி’ன் முன்னோட்டத்தை இந்திய சினிமாவின் முன்னணி பிரபலங்களான ஹிருத்திக் ரோஷன், அபிஷேக் பச்சன், விஜய்சேதுபதி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், ஜனனி, இயக்குநர் மோகன் ராஜா, பி. சமுத்திரக்கனி, பாலாஜி மோகன், கார்த்திக் சுப்புராஜ் என பலரும் இதனை பாராட்டியிருக்கிறார்கள்.

நடிகர் ஹிருத்திக் ரோஷன் இதுதொடர்பாக தன்னுடைய டுவிட்டரில்..” என்னுடைய நண்பர்களான புஷ்கர் காயத்ரியின் படைப்பு சிந்தனையில் உருவாகியிருக்கும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ பிரமிக்கத்தக்க வகையில் உருவாகியிருக்கிறது. அமேசானின் முதல் தமிழ் ஒரிஜினல் தொடரான ‘ சுழல் தி வோர்டெக்ஸ்’ ஜூன் 17ஆம் தேதியன்று வெளியாகிறது.” என பதிவிட்டிருக்கிறார்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய டுவிட்டரில், ” புஷ்கர் காயத்ரி குழுவினருக்கும், சுழல் தி வோர்டெக்ஸ்’ வெப் சீரிஸ் குழுவினருக்கும்  என்னுடைய  மனமார்ந்த வாழ்த்துக்கள். ” என பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் ஆர்யா தன்னுடைய டுவிட்டரில், ” சுழல் = தி வோர்டெக்ஸ்’ வலைதள தொடரின் முன்னோட்டம் மனதை கவர்ந்தது. குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய  ட்விட்டரில், ” சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரின் முன்னோட்டம் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. தொடர் முழுவதையும் காண வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்திருக்கிறது. குழுவினருக்கு வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய டுவிட்டரில், ” சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரின் முன்னோட்டம் கண்டு ரசித்தேன். மெய் சிலிர்த்தேன். அமேசானின் முதல் தமிழ் ஒரிஜினல் தொடரான இதனை கண்டு ரசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என பதிவிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.