பீட்டர் ராஜ் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் புவன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், ஸ்ரீதர் மாஸ்டர், மறைந்த நிதிஷ் வீரா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பெல்’
பார்வையற்றவரான நாயகன் நடன இயக்குநர் ஸ்ரீதர், சித்தர்களின் வழித்தோன்றல்.அவர் நூறு வருடங்கள் வாழக்கூடிய சக்தியைக் கொடுக்கும் மூலிகையைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்.. அதே சித்தர்களின் வழித்தோன்றலில் வந்த குரு சோமசுந்தரம், அந்த மூலிகையைக் கைப்பற்றி வெளிநாடுகளுக்கு விற்றுப் செய்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்.இறுதியில் ஸ்ரீதர் அந்த மூலிகையை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ‘பெல்’ படத்தின் மீதிக்கதை.
பெல் என்ற கதாபாத்திரத்தில் நடன இயக்குநர் ஸ்ரீதர் பார்வையற்றவராக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஆனால் அவருடைய நடிப்பை நம்மால் பார்க்க முடியவில்லை ஸ்ரீதரின் கற்பனை உருவத்தில் வருகிறார் மறைந்த நடிகர் நிதீஷ் வீரா. அவரும் குறைவைக்கவில்லை. நண்பராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் பீட்டர், தேர்ந்த நடிகர் போல சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். பார்வையிலேயே வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாநாயகிகளாக நடித்திருக்கும் ஷார்மிஷா, துர்கா இருவரும் புதுமுகங்கல் என்று சொல்ல முடியாத அளவிற்கு தங்கள் கதாபாத்திரத்தை செய்திருக்கிறார்கள்.
ராபர்ட் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம், பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. மலைப்பிரதேசத்தில் நடக்கும் கதை என்பதால் காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பரணிக்கண்ணன்
வெயிலோனின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் ஆர்.வெங்கட் புவன், மூலிகை மருத்துவத்தை மையப்படுத்திய கதையை சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் திரைப்டத்தி விறுவிறுப்பாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார். சமுருக அக்கறையோடு எடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘பெல்’ இயற்கை மூலிகை பாதுகாப்பது பகுறித்து சொல்லும் படம்
மதிப்பீடு: 2 / 5
நடிகர்கள் : குரு சோமசுந்தரம், ஸ்ரீதர் மாஸ்டர், லேட் நிதிஷ் வீரா
இசை: ராபர்ட்
இயக்கம்; ஆர்.வெங்கட் புவன்
மக்கள் தொடர்பு : வேலு
Leave a Reply